57 வது தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இலங்கை விமானப்படை ஆண்கள் ஜூடோ அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது இந்த போட்டிகள் கடந்த 2019 அக்டோபர் 04ம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி ஜயதிலக்க உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக நாவலப்பிட்டிய நகரசபை மேயர் திரு. சங்க சம்பத் சஞ்சீவ அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த போட்டிகளில் விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் ஜோடோ வீரவீரங்கனைகள் கலந்துகொண்டனர் இதில் ஒட்டுமொத்தப்போட்டிகளில் ஆண்கள் அணியினர் 02மிடத்தை பெற்றுக்கொண்டனர் .
இந்த போட்டிகளில் விமானப்படை ஆண்கள் அணிசார்பாக 06 தங்கம் 03 வெள்ளி 08 வெண்கலம் உட்பட மொத்தமாக 45 [புள்ளிகளை பெற்றுக்கொண்டனர் மொத்தமாக 12 அணிகள் பங்குபெற்றின இந்தப்போட்டிகளில்.