விஷேட சுகாதார மற்றும் மருத்துவ முகாம் - நதுன்குலம்
7:25pm on Thursday 13th October 2011
இலங்கை விமானப்படை வவுனியா முகாமினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விஷேட சுகாதார மற்றும் மருத்துவ முகாமொன்று 07.10.2011ம் திகதியன்று நதுன்குலம் சிறுவர் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.

எனவே இந்நிகழ்வில் சுகாதாரம் தொடர்பான விஷேட கருத்தரங்குகள் இடம்பெற்றதுடன், எனவே இந்நிகழ்வுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமத்தார் பங்குபற்றியதுடன் இது இம்முகாமின் ஒரு சமூக சேவையாகவே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்ச்சியானது முற்றாக இலவசமாக இலங்கை விமானப்படை வைத்திய அதிகாரிகளால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்ச்சியானது இலங்கை விமானப்படை வவுனியா முகாமில் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" KFR பெனான்டு அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப "பிலைன் ஒப்பிசர்" HP கல்கொலகெ மற்றும் "ஸ்கொட்ரன் லீடர்" EM ரிஸ்வான் ஆகிய வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை