''பெறமாக'' திட்டத்தின் கீழ் ராகம போதனா வைத்தியசாலையின் புதுப்பித்தல் வேலைத்திட்டத்தில் விமானப்படையினர் கைகோர்த்தனர்
10:40am on Tuesday 23rd June 2020
இலங்கை  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  உத்தரவின் பேரில்  ராகம வடக்கு  போதனா வைத்தியசாலையில் புதிய  கட்டுமான வேலைத்திட்டம்கள் 14 மே 2020 ஆரம்பிக்கபட்டன. கொவிட் 19  தொற்றின் காரணமாக  சுகாதார வசதிகளை  மேண்மைப்படுத்தும் வகையில் இது   இரண்டதாவது ட்ரெஜ் மைய்யமாகும்.

கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  சிவில்  பொறியியல்  படைப்பிரிவின் 35 அங்கத்தவர் உட்பட பிலைட் லேப்ட்டினால்  புத்திக அவர்களின் கண்காணிப்பின்கீழ் 21 நாட்களில் இந்த கட்டுமான பணிகள் நிறைவுக்கு  வந்தது.

உங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், கொவிட் 19 இலிருந்து தேசத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதையும் நோக்கமாகக் கொண்ட “பெரமகா” முன்முயற்சியின் கீழ் இது போன்ற இரண்டாவது திட்டமாகும்.

இந்த  கட்டிடத்தொகுதி  கடந்த 2020 ஜூன் 09 ம் திகதி  திரு. முர்தாசா ஏசுபல்லி, திருமதி அவந்தி ஏசுபல்லி, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க மற்றும் விமானப்படையின்  சிவில் இன்ஜினியரிங் பணிப்பளார்  எயார்  வைஸ் மார்ஷல் ருச்சிரா சமரசிங்க ஆகியோரால் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில்  மேலும்  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல  ஜயவர்தன அவர்களும்  கலந்துகொண்டார்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை