சர்வதேச தேடல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு பயிற்ச்சி பட்டறை அம்பாறை விமானப்படைத்தளத்தில் ஆயுதப்பயிற்சி பிரிவினருக்கு வழங்கப்பட்டது.
12:03pm on Saturday 3rd July 2021
சர்வதேச தேடல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழுவின் (INSARAG) இரண்டாவது பயிற்ச்சி பட்டறை  கோட்பாட்டு மற்றும் நடைமுறை அமர்வு இல 99 வது  ஆயுதப்பயிற்சி ( அடிப்படை 1) பாடநெறியின் பயிற்சியாளர்களுக்காக அம்பாறை விமானப்படைத்தளத்தில்  கடந்த 2021 பெப்ரவரி 16ம் திகதி  இடம்பெற்றது இந்த பயிற்சிநெறிகள் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள  பேரிடர் மேலாண்மை பயிற்சி பாடசாலை பயிற்சியார்களினால் நடத்தப்பட்டது.

பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தின் கட்டளை அதிகாரி, விங் கமாண்டர் ரணசிங்க மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்றுனர்கள் இந்த பட்டறை நடத்தினர்.அம்பாறை விமானப்படை கட்டளை அதிகாரி,  எயார் கமடோர்  வீரசூரிய  ரெஜிமென்ட்  பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி குரூப்  கேப்டன்  குமாரசிறி  மற்றும் அனைத்து பயிற்றுநர்களும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த ஒருங்கமைத்து வழங்கினார் .

இந்த பயிற்சிநெறிகளினால்   நகர்ப்புற மீட்பு, கள ஒருங்கிணைப்பு ஆதரவு, அவசரகால தயார்நிலை மற்றும் பதிலளிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட குறுகிய கால பயிற்சித் திட்டம் இதன் மூலம் அதிக உயிர்களைக் காப்பாற்றும், துன்பங்களைக் குறைக்கும் மற்றும் பாதகமான விளைவுகளை குறைக்கமுடியும்  மேலும் நகர்ப்புற தேடல் மற்றும் சரிந்த கட்டமைப்புகளில் பணிபுரியும் மீட்புக் குழுக்களிடையே ஒத்துழைப்பில் செயல்திறனை மேம்படுத்துதல் இந்த பயிற்சித் திட்டத்தின் போது உள்ளடக்கப்பட்டவை.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை