இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியில் கூட்டுசமூக சேவைதிட்டம்
1:51pm on Friday 1st July 2022
போசன் போயா தினத்தை முனிட்டு கடந்த 2022 ஜூன் 13ம் திகதி  இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரி மற்றும் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினர்  இணைத்து சீதுவ  தொழில்பயிற்ச்சி  நிலையத்தில் இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் சமூக சேவை திட்டம் ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
 
இந்நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரிகேடியர் (டாக்டர்) கிறிஷாந்த பெர்னாண்டோ, இலங்கை கடற்படை, கொமடோர் (டாக்டர்) ஜானக மரம்பகே, இலங்கை விமானப்படை, எயார் வைஸ் மார்ஷல் (டாக்டர்) லலித் ஜயவீர மற்றும் வாழ்க்கைத் துணைவியர்கள் மற்றும்  விமானப்படை பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இதன் பொது சுமார் 300 பேர் கலந்துகொண்டு  பயன்பெற்றனர் இதனுள் மருத்துவம், பல், கண், குறைந்த பார்வை, மனநல மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து மருத்துவம் என்பன இடம்பெற்றன மேலும் விமானப்படை இசைக்குழுவினால்  இசைநிகழ்வும்  நடாத்தப்பட்டது .

மேலும் வரிய குடும்பத்தினருக்கு 100 உலருணவு பொதிகளும் வழங்கப்பட்டது. மேலும் வரிய குடும்பத்தினருக்கு 100 உலருணவு பொதிகளும் வழங்கப்பட்டது

இந்த நிகழ்வுகள் அனைத்தும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  மற்றும்  விமானப்படை  சுகாதார பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல்  லலித் ஜெயவீர ஆகியோரின்  வழிகாட்டலின்கீழ் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை