ரத்மலான விஷாகா வித்தியாலயத்தில் கனிஷ்ட மாணவர் தலைவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் திறன்மேம்பாட்டு திட்டம்
4:17pm on Monday 4th July 2022
ரத்மலான விஷாகா வித்தியாலயத்தில் கனிஷ்ட மாணவர் தலைவர்களுக்கான  தலைமைத்துவ மற்றும் திறன்மேம்பாட்டு திட்ட பயிற்சிநெறி கடந்த 2022 ஜூன் 25ம் திகதி ரத்மலான விமானப்படை தளத்தில்  படைத்தளத்தை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் நிஹால் ஜயசிங்க  அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது

விசாகா வித்தியாலயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன மற்றும் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பயோ அவர்களின் மேற்பார்வையின் கீழ், விமானப்படை அதிகாரிகளால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதன்போது ‘அடிப்படை தலைமைத்துவ கோட்பாடுகள் மற்றும் தலைமைத்துவ குணங்கள்’, ‘உளவியல் அம்சத்தில் சமநிலை வாழ்க்கை, ‘மனநிலை’, ‘உணவு நெறிமுறைகள்’, ‘நடைமுறை தலைமைத்துவ மதிப்பீடு மற்றும் மேம்பாடு’ ஆகிய அமர்வுகள் குழு உணர்வை வளர்க்கும் நடவடிக்கைகள் மூலம் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. இந்த அமர்வுகள் விங் கமாண்டர் ஜயரத்ன அமரசிங்க, விங் கமாண்டர் டிஹான் பெர்னாண்டோ, விங் கமாண்டர் சந்தன ஏக்கநாயக்க, விங் கமாண்டர் மேனோகா ஹப்புஆராச்சி, ஸ்கொற்றன் ளீடர் லிலங்கி ரந்தேனி மற்றும் ஃப்ளைட் லெப்டினன்ட் நிமாஷா கன்னங்கர ஆகியோரால் அமர்வுகள் நடத்தப்பட்டன.

இந்த பயிற்சிநெறில் 49 கனிஷ்ட மாணவர் தலைவர்கள்  கலந்துகொண்டனர் அவர்களுக்கு மேலும் விமானப்படை அருங்காட்சியகம் மற்றும் விமான பொறியியல் ஆதரவு பிரிவு ஆகியன காண்பிக்கப்பட்டன

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை