இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
எயார் சீப் மார்ஷல் ஜி.டி.பெரேரா VSV, USP, ndc, psc
Air Chief Marshal G D Perera VSV, USP, ndc, psc
"எயார் சீப் மார்ஷல்" ஜி.டி. பெரேரா அவர்கள் இலங்கை விமானப்படையில் 1972- 01- 12 ஆம் திகதியன்று இணைந்துகொண்டதுடன் ,1973- 10- 19 ஆம் திகதியன்று விமான ஓட்டுனர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

மேலும் இவர் விமானிப்பயிற்ச்சி பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், இல.02 விமானப்போக்குவருத்துப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், கடுநாயக்க விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரியாகவும் ,சீனக்குடா விமானப்படி முகாமின் கட்டளை அதிகாரியாகவும், கிழக்கு வலய கட்டளை அதிகாரியாகவும்,மன்ற அதிகாரிகளின் பிரதானியாகவும் செயற்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இவர் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பயிற்ச்சிநெறிகளை நிறைவுசெய்துள்ளதோடு ,7500 மணித்தியாளங்களுக்கு மேல் விமான ஓட்டுனராகவும் குறிப்பாக போக்குவருத்து விமானங்களில் செயற்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதியாக இவர் விஷிஸ்ட சேவா விபூஷனய, உத்தம சேவா பதக்கம், இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கான பதக்கம் போன்ற பல்வேறுபட்ட பதக்கங்களை வென்றுள்ளதுடன் 2006- 06- 11 ஆம் திகதியன்று தனது கடமைகளில் இருந்து ஓய்வுபெற்றார்.
 
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை