இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
எயார் சீப் மார்ஷல் பி.எச். மென்டிஸ் idc, psc, FBIM qfi
Air Chief Marshal P H Mendis 
MBIM,IDC,pscஎயார் சீப் மார்ஷல் பத்மன் கரிஸ்பிரசாத் மென்டிஸ் அவர்கள் 1971 -01-01 ஆம் திகதியன்று அவரது 38ஆம் வயதில்  ஓர் இளம் விமானப்படைத்தளபதியாக பதவியேற்றதுடன் இவர் முப்படைகளிலும் இருந்த ஓர் இளமை மிகு தளபதியுமாவார்.

மேலும் இவர் புனித தோமஸ் கல்லூரியில் கல்வி பயின்று பின்னர் றோயல் சிலோன் விமானப்படையில் 5ஆவது இலங்கையராக இணைந்துகொண்டதுடன் ,பின்னர் றோயல் சிலோன் விமானப்படையில்  இல,61 ஆம் பிரிவில் பயிற்ச்சி பெற்று விமானியாக தெரிவுசெய்யப்பட்ட அதேநேரம் 1954 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வருகைதந்து அப்போதைய ஆளுனராக இருந்த சேர். ஒலிவர் குணதிலக அவர்களிடம் இருந்து விமானப்படையில் இணைவதற்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொண்டார்.

மேலும் இவர் 1957-09- 01 ஆம் திகதியன்று இல 02 போக்குவருத்து விமானப்பிரிவை ஆரம்பித்ததுடன்,முதலாவது விமானிப்பயிற்ச்சி ஆலோசகராகவும் செயற்ப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு இவரது காலத்தில் கெலிடுவர்ஸ் மற்றும் மொறவெவவில் ஓர் விவசாயப்பிரிவையும் ஆரம்பித்த அதேநேரம் 1976- 11-01 ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்றதுடன் ,தேசமான்ய பட்டத்தினையும் பெற்றுக்கொண்டமை விஷேட அம்சமாகும்.
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை