இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
இலங்கை விமானப்படைத் தளபதி
Commander of the Sri Lanka Air Forceஎயார் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ்
RSP and three Bars, VSV, USP, MSc (Def Strat Stu), ndc, psc

எயார் மார்ஷல் டம்புரே  லியனகே  சுமங்கள டயஸ் அவரகள்  இலங்கை விமானப்படையில்  1984 டிசம்பர் 13ம் திகதி கடேட் அதிகாரியாக விமானப்படை  பொதுசேவையில்  விமானியாக  13வது அதிகாரிகள்  பயிற்சிநெறியில் மூலம் இணைந்து கொண்டார். ஆரம்ப மற்றும் உயர்தர பயிற்சிகள் அனைத்தையும்  நிறைவு செய்தபின்னர்  1986 ம் ஆண்டு  ஆகஸ்ட் 15ம் திகதி விமானப்படையின்  உத்தியோக பூர்வ  பைலட் அதிகாரியாக  பொறுப்பேற்று  GDP ( பொது சேவை விமானி) கிளைபிரிவில்  இணைத்துக்கொண்டார்.

எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவரகள்   ஊழியர் பயிற்சிநெறியினை   வெலிங்டனில் மற்றும் இந்தியாவில் பாதுகாப்பு சேவைகள்  ஊழியர் கல்லூரியில் 2001 ம் ஆண்டு நிறைவு செய்தார் அதோடு  தேசிய பாதுகாப்பு பயிற்சியினை  வங்காளதேசத்தில் உள்ள மிர்பூரில் பூர்த்தி செய்தார்.

அவர் மேலும் இந்தியாவில் ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி, இந்திய விமானப் படைகளின் கூட்டு விமானப் போர் பயிற்சி,மற்றும் பாக்கிஸ்தானில் விமான  விபத்துப் புலனாய்வுப் பயிற்சி என்பவற்றை  நிறைவு செய்தார்.

அவர் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி,  ரத்மலானை இலங்கை விமானப்படைத் தளத்தில் இல  02 கனரக  போக்குவரத்து படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் , அதன் பின்னர் அங்கு  இல  08 இலாஹரஹு போக்குவரத்து பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் .2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதிவவுனியா  இலங்கை விமானப்படை தளத்தில்  இல  06 ஹெலிகொப்டர் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.அதன் பின்பு  2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி  ஹிங்குரகோட  விமானப்படை  படைத்தளத்தில் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார், அதில் இரண்டு ஹெலிகாப்டர் ஸ்குடான்களும் அடங்கும். அவர் மனிதாபிமான நடவடிக்கையின் மூத்த விமானப் பணிப்பாளராகவும், 2009 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கை முடிவடைந்த வரை வடக்கு, கிழக்கு பகுதிகளில்  57 வது, 58 வது மற்றும் 59 வது படைப்பிரிவின்  கட்டளை அதிகாரியாக  கடமையாற்றினார் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ஆம் திகதி ரத்மளான விமானப்படைத் தளத்தில் இரண்டு விமானி பயிற்சி  படை  உட்பட, 06 படைப்பிரிவுகள்  அடங்கலாக  ரத்மலான விமானப்படை  தளத்தில் கட்டளை அதிகாரியாக  பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கு அவர் சர்வதேச தர ரக்பி மைத்தனத்தை அமைக்கும்  திட்டங்களின் பெரும்  செய்தார்.  2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல்  2013 ஜூன் 10 ம் திகதி வரையான காலப்பகுதியில்     விமானி பயிற்சி  படை  03 உட்பட  ,25 படைப்பிரிகள் கொண்ட  கட்டுநாயக விமானப்படை தளத்தில் கட்டளை அதிகாரியாக  பொறுப்பேற்றுக்கொண்டார். அவர்  பிரதான வான் பாதுகாப்பு அதிகாரியாக கடையாற்றிய பின்பு  2013 ம் ஆண்டு பிரதி வான் பாதுகாப்பு  பிரதி பணிப்பாளராகவும் தொடர்ந்து 2014 பிப்ரவரி  28 ம் திகதி   வழங்கல்  பிரிவின் பிரதி   பண்ணிப்பாளராக பொறுப்பேற்றற்றான்  வருடம் ஜூலை 01 ம் திகதி  வழங்கல்  பிரிவின் பண்ணிப்பாளராக நியமிக்கபட்டர்  அதன் பின் எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ்  அவர்கள்  2016 ம்  ஜூலை 15 ம் திகதி விமானப்படை  தலைமை அதிகாரியாக   பொறுப்பேற்றுக்கொண்டார்.

எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் இலங்கை விமானப்படையின் 17 வது  தளபதியாக பொறுப்பேற்றதோடு  அதன் முன்பு 2016 அக்டோபர் 01 ன் திகதியில் இருந்து அவர் விமானப்படை தலைமை அதிகாரியாக இருந்தார் .


எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவரகளுக்கு வடமராச்சி நடவடிக்கை பதக்கம் , பூரண பூமி சேவை  பதக்கம்  ,  தேசிய புத்ரா விருது , ரண சூர பதக்கம் ,   ரணசூர பதக்கம் 04 முறை , வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கைகள் பதக்கம், ரிவிரெச  செயல்பாட்டு சேவை பதக்கம், 50வது  சுதந்திர தின கொண்டாட்டம் பதக்கம், விமானப்படை 50 வது ஆண்டு நினைவு தின பதக்கம் ,வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், உத்தம சேவை  பதக்கம்  மற்றும்  சிறந்த சேவை  விபூஷண  பதக்கம் என்பன கிடைக்கப்பட்டது.

எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவரக்ளுக்கு நாட்டு மகன் விருது வழங்கப்பட்டது  02வது  ஈழ யுத்தத்த்தின்  போது  சிலாபத்துறை பிரதேசத்தில் வான் நடவடிக்கைகளின் பொது  எதிரிகளால் தாக்கப்பட்டு  உபாதைக்குள்ளான  காரணத்தினால். 2008 ஆம் ஆண்டு நான்காவது ஈழப் போரின் இறுதிக்கட்டத்தின்போது, அவர் சிரேஷ்ட வான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் விமானத் தளபதியாகவும் புத்திசாலிதனமாக இராணுவத்தின் 57 வது, 58 வது மற்றும் 59 வது படைப்பிரிவுகளின்   தரைப்படை நடவடிக்கைகளுடன் விமான நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பை மேற்றக்கொண்டுரிந்தார். இலங்கையில்  முப்பது வருட பயங்கரவாத நடவடிக்கைகளை , அவர் மனிதாபிமான நடவடிக்கைகளின் மூலம் முடிவிற்கு கொண்டுவர  பெறும்  பங்களித்தார்.

2011ம் ஆண்டு உருவாக்கப்பட்ட  விமானப்படை  கயிறிழுத்தல் அணியின் முதலாவது தலைவரும் ஆவர்,அதேபோல்  2012 ம் ஆண்டு விமானப்படை   சிறுவர் விளையாட்டுப்பிரிவு  , 2014ம் ஆண்டு  விமானப்படை  சைக்கிள் ஓட்டப்போட்டி பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் அதேபோல் அவர் ரஃக்பி  ஆலோசனைக்குழு தலைவராகவும் இருந்தார்.

எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  மயூரி டயஸ் அவர்களை  திருமணம் செய்ததோடு  அவர்களுக்கு  ஒரு மகனும் மகளும் உள்ளனர்.  

பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை