இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விளையாட்டு வீரர்களுக்கான பரிசளிப்பு விழா

2011-01-15 12:05:50
விளையாட்டு வீரர்களுக்கான பரிசளிப்பு விழா
இலங்கை விமானப்படையின் விளையாட்டு வீரர்களுக்கான பரிசளிப்பு விழா கூட்டுப்படைகளின் பிரதானியும், விமானப்படைத்தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலக மற்றும் ஏனைய அதிகாரிகள் தலைமையில் 'வோட்டர்ஸ் ஏஜ்' சுற்றுலா விடுதியில் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

எனவே இதன் அடிப்படையில் 6 விளையாட்டு நிகழ்வுகளின் மொத்தம் 268 வீரர்களுக்கு விஷேட நிறங்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டதுடன், இதில் 2009ன் சிறந்த விளையாட்டு வீரருக்கான 'வரதராசா' விருதினை சாஜன்ட் பிரியதர்ஷன (நீச்சல்)கூட்டுப்படைகளின் பிரதானியும் விமானப்படைத்தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலகவிடம் இருந்து பெற்றுக்கொண்டதுடன் அவ்வருடத்தின் சிறந்த வீராங்கனைக்கான 'பிளைட் லெப்டினன் பிரியா அபேவீர' விருதினை கோப்ரல் ரத்நாயக்க பெற்றுகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் வருடத்தின் இரண்டாவது சிறந்த  வீரருக்கான 'எயார் வைஷ் மார்ஷல்' டப்.டி.எஸ்.டப். குணதிலக விருதினை கோப்ரல் அபேகோன் (வொலிபோல்) பெற்றுக்கொண்டதுடன், வீரங்கனைக்கான  விளையாட்டு மன்ற விருதினை  சாஜன்ட் பிரஸாதிக (குறிபார்த்து சுடுதல்) பெற்றுக்கொண்டார். அத்தோடு விளையாட்டுத்துறையில் சிறந்த முகாமாக கொழும்பு விமானப்படை முகாம் தெரிவுசெய்யப்பட்டதுடன், சிறந்த அணியாக விமானப்படையின்  'கொக்கி ' அணி தெரிவுசெய்யப்பட்டது. அதேநேரம் வருடத்தின் ஜொலிக்கும் வீரருக்கான விருதினை 'வொரன்ட் ஒபிஸர்' சி.என்.எஸ்.ஸ்டேன்வேல் தெரிவுசெய்யப்பட்டதுடன், சிறந்த ரகர் வீரருக்கான 'எயார் சீப் மார்ஷல்' டப்.டி.எச்.எஸ். குண்திலக விருதினை கோப்ரல் சந்திமால் பெற்றுக்கொண்டார் என்பதும் விஷேட அம்சமாகும்.

மேலும் 2009ம்  ஆண்டில் தமது திறமைகளை மிகச்சிறப்பாக வெளிக்காட்டிய சுமார் 19 வீர, வீராங்கனைகளுக்காக 'கோல்டன் ஈகள்' விருதுகல்  வழங்கி கொரவிக்கப்பட்டனர், அவர்களினது பெயர் விபரங்கள் பின்வருமாறு.

படகு ஓட்டுதல் (ஆண்)
 ஏ.சி. ஜயரத்ன கே.ஜி

குறிபார்த்து சுடுதல் (பெண்)
சார்ஜண்ட் விஜேரத்ன ஜி.ஏ.ஜி.ஏ.டி

விளையாட்டுப் போட்டிகள் (ஆண்)
ஏ.சி. சமீர .எம்

விளையாட்டுப் போட்டிகள் (பெண்)
கோப்ரல் ரஷ்நாயக

துவிச்சக்கர வண்டி போட்டி (ஆண்)
ஏ.சி.சில்வா பி.ஜெ.எம்.ஜெ

காற்பந்தாட்டம் (ஆண்)
 எல்.ஏ.சி. ரகீம் டி.ஆர்.ஜி

நீச்சல் (ஆண்)
 சாஜன்ட்  பிரியதர்ஷன கெ.வி.எஸ்

மல்யுத்தம் (ஆண்)
 எல்.ஏ.சி. லியனகெ ஆர்.ஐ

கரப் பந்தாட்டம் (ஆண்)
கோப்ரல் அபேகோன் எ.எம்.டி.சி 
                                            
கரப் பந்தாட்டம் (பெண்)
 எ.சி. குனரத்ன கெ.என்.எம்

பாரம் தூக்கும் விளையாட்டு (ஆண்)
 எல்.எ.சி.சமரசேகர ஆர்.எம்.ஆர்.ஆர்

பாரம் தூக்கும் விளையாட்டு போட்டி (பெண்)
 எ.சி.பேதுருவாரச்சி எஸ்.டி

கடற்கரை கரப் பந்தாட்டம் (ஆண்)
சாஜன்ட் சில்வா ஜி.பி.டி.ஆர்

கடற்கரை கரப் பந்தாட்டம் (பெண்)
 கோப்ரல் ஹேவகெ டி.டி.எஸ்      
                                     
குத்துச் சண்டை (ஆண்)
 கோப்ரல் பட்டியாரச்சி டி.எஸ்

ஜூடொ (பெண்)
 எ.சி. விஜெரத்ன டி.ஜி.சி.டி

கராத்தே (ஆண்)
கோப்ரல் எட்வர்ட் ஆர்.ஜெ

ரக்பி (ஆண்)
 கோப்ரல் சந்திமால் .சி

மேசைப்பந்தாட்டம் (பெண்)
 ஏ.சி. சிரிசேன எம்.ஜி.ஆர்
join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை