இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை கிரிக்கெட் அணி ஹம்பாந்தோட்டை நோக்கி புறப்பட்டது.

2011-02-21 08:26:18
இலங்கை கிரிக்கெட் அணி ஹம்பாந்தோட்டை நோக்கி புறப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியினர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பங்கேற்பதற்காக வேண்டி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து 18.02.2011 ம் திகதியன்று ஹம்பாந்தோட்டை நோக்கி புறப்பட்டனர்.

இவர்கள் விமானப்படைக்கு சொந்தமான M.I. 17 எனும் இரு காற்றாடி விமானங்கள் மூலம் ஹம்பாந்தோட்டை நோக்கி புறப்பட்டு சென்ற அதேநேரம் ,இவர்களுக்கான முதற்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கனடா அணிக்கு எதிராக நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர்களை விமானப்படையின் சுகாதார இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" N.H.குணரத்ன மற்றும் விமான ஒழுங்கமைப்பு இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" கோலித குணதிலக ஆகியோர் அன்புடன் வரவேற்ற அதேநேரம் 28வது ரெஜிமென்ட் பிரிவின் கட்டளை அதிகாரி "விங்கமான்டர்" அதுல நானயக்கார ,இலங்கை கிரிக்கெட்அணியின் உப-தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார் ,இங்கு அணித்தலைவர் குமார் சங்கக்கார வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேபோன்று இவர்கள் அனைவரும் விமானப்படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் உற்சாகமூட்டி அனுப்பிவைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை