இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படையனி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.

2011-02-22 18:39:01
விமானப்படையனி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.
இலங்கை விமானப்படை மற்றும் அம்பலாங்கொடை 'சிங்ஹ' விளையாட்டு கழகங்களுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விமானப்படையனி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியதுடன் போட்டியானது கொழும்பு 'ரைபல் கிறீன்' மைதானத்தில் 20.02.2011ம் திகதியன்று இடம்பெற்றது.

3நாட்களாக இடம்பெற்ற இப்போட்டியில் தனது முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய விமானப்படையினர் ,66.3 ஓவர்கள் நிறைவில் 318 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதேநேரம் ,விமானப்படை சார்பாக ராஜித ரத்னாயக சதம் அடித்ததுடன் ,ரயன் கேன் மற்றும் ரஜிவ் கயேஷென் ஆகியோர் முறையே 73,48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் சிங்ஹ விளையாட்டு கழகம் சார்பாக சம்பத் பெரேரா 3விக்கெடுக்களையும்,சுழற்பந்து வீச்சாளர் ரொஷான் வீரசிங்க  2விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிங்ஹ விளையாட்டு கழகத்தினர் தனது முதல் இனிங்ஸிற்காக சகல விகெட்டுக்களையும் இழந்து 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன்,பந்து வீச்சில் விமானப்படை சார்பாக பெர்னான்டு 4விக்கெட்டுக்களையும்,மற்றும் ஜயவர்தன 3விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இரண்டாம் இனிங்ஸில் 224 ஓட்ட முன்னிலையில் விமானப்படை காணப்பட்டதுடன் ,முதலில் துடுப்பெடுத்தாடிய சிங்ஹ விளையாட்டு கழகத்தினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதேநேரம் சிங்ஹ கழகம் சார்பாக லகிரு அஷேன் 86 ஓட்டங்களையும்,லெவென் மோஷின் 87ஓட்டங்களையும்பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் விமானப்படை சார்பாக ரவின் ஜயவர்தன மற்றும் அஞ்சலோ எம்மானுவெல் தலா மூன்று விக்கெடுக்கள் வீதம் வீழ்த்தினர்.இறுதியாக 47 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கினை நோக்கி தனது ஆட்டத்தை ஆரம்பித்த விமானப்படையினர்,18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 6விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

முதல் இனிங்ஸ்
விமானப்படை 318/10 (66.3 ஓவர்கள்)

துடுப்பெடுத்தாட்டம்.

ரஞ்சித் ரத்னாயக- 100
ரயான் கேன் - 73
ரஜிவ் கயேஷன் - 48

பந்துவீச்சு.

ரொஷான் வீரசிங்க- 33/2
சம்பத்-  42/3

சிங்ஹ விளையாட்டு கழகம்.

துடுப்பெடுத்தாட்டம்.
94/10

இரண்டாம் இனிங்ஸ்.
சிங்ஹ விளையாட்டு கழகம் .

துடுப்பெடுத்தாட்டம்

லகிரு அஷேன் - 86
லெவென் மோஷன் - 87

பந்து வீச்சு.

ரவின் ஜயவர்தன - 67/3
அஞ்சலோ எம்மானுவல்- 70/3
டினூஷ பெர்னான்டு- 49/2

விமானப்படை.

துடுப்பாட்டம்
50/4 (18.3 ஓவர்கள்)நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை