இலங்கை விமானப்படையின் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
2011-04-22 07:09:00
இலங்கை விமானப்படையின் புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் பல பாரம்பரிய விளையாட்டுக்களுடன் மிக சிறப்பாக இடம்பெற்றது.
எனவே விமானப்படையின் பிரதான புத்தாண்டு கொண்டாட்ட விழா கொழும்பு "றைபல் கிறீன்" மைதானத்தில் இடம்பெற்றதுடன் இங்கு பிரதம அதிதியாக இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.
மேலும் விமானப்படையின் இயக்குனர்கள், அதிகாரிகள் உட்பட ஏனைய படை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.