இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

காலம்சென்ற விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின் கோப்ரல் ஜயதிலக்கவின் குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு.

2019-05-14 08:28:27
காலம்சென்ற  விமானப்படை ரெஜிமென்ட்   விசேட படைப்பிரிவின்  கோப்ரல் ஜயதிலக்கவின்  குடும்பத்திற்கு  ஒரு புதிய வீடு கையளிப்பு.
இலங்கை விமானப்படையின்  ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின்  சேவையாற்றிய  காலம்சென்ற  கோப்ரல்  அமரர் . ஜயதிலக்க அவர்களின் குடும்பத்திற்கு  விமானப்படை  நலன்புரி பிரிவின் பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல்  மெரிஸ்டெல அவர்களின் ஏற்பாட்டில் புதிய வீடு நிர்மாணித்து  வழங்கி வைக்கப்பட்டது.

இந்த கோப்ரல் அவர்கள்  கடந்த 2017 மே 22 ம் திகதி  நாயர் இராணுவ பயிற்சி பாடசாலையில்  யுத்தக்களை  பயிற்சியில்   ஈடுபடும்போது மரணம் அடைந்தார்.

இந்த வீடு நிர்மாணத்துக்கு தேவையான  வசதிகளை  விமானப்படை  நலன்புரி அமைப்பு வழங்கியதோடு இதன் வேலைத்திட்டம்கள்  மொரவெவ  ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின்  கட்டளை அதிகாரியும் மொரவெவ விமானப்படை  கட்டளை அதிகாரியுமான  விங் கமாண்டர்  நந்தக குமார அவர்களின் வழிகாட்டலின்கீழ்  ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின்  படைவீர்களால் நிர்மானித்து வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை