இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை மல்யுத்த விளையாட்டு பிரிவின் 50வது வருட நிகழ்வு கொண்டாட்டம்

2019-09-30 10:44:15
விமானப்படை  மல்யுத்த  விளையாட்டு பிரிவின் 50வது  வருட நிகழ்வு கொண்டாட்டம்
இலங்கை விமானப்படையின் மல்யுத்த விளையிட்டு பிரிவினால் ஏற்டபாடு செய்யப்பட்ட 2019  இடைநிலை போட்டிகள் மற்றும் மல்யுத்த விளையிட்டு பிரிவின் 50 வது   நினைவும் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வு கடந்த 2019  செப்டம்பர் 19ம் திகதி கொழும்பு  விமானப்படையின்  சுகாதார மேலாண்மனை மையத்தில் இடம்பெற்றது . இதன்போது  கொழும்பு  விமானப்படைதள அணியினர் ஆண் மற்றும் பெண்கள் பிரிவில்  வெற்றிபெற்றனர்.

மேலும் இரண்டாம் இடத்தை  ஹிங்குரகோட மற்றும் ஏக்கல  விமானப்படை தளம்கள்  முறையே ஆண்  மற்றும் பெண்கள்   பிரிவில் பெற்றுக்கொண்டனர்.

அன்றய தினம் விசேடமான ஓன்று  விமானப்படை மல்யுத்த விளையிட்டு பிரிவின் 50 வருட பூர்த்தி தினம் என்பது   ஒரு விசேட அம்சமாகும்.
விமானப்படை மல்யுத்த விளையிட்டு பிரிவானது  1969  ராயல் விமானப்படை  மல்யுத்த விளையிட்டு பிரிவாக  07 பேருடன் ஆரம்பிக்கபட்டது  
1969ம் ஆண்டு இடம்பெற்ற  தேசிய மல்யுத்த போட்டிகளில் விமானப்படை  சார்பாக போட்டியிட்டு சிரேஷ்ட விமானப்படை வீரர் பியதாச அவர்கள் வெற்றிபெற்று   விமானப்படை  மல்யுத்த வரலாற்றில் தனது பெயரை பதிவுசெய்துகொண்டார்.

அதன்பிறகு  இந்த ஐந்து தசாப்தங்களுக்குள்  3 வீரர்களால்   '' வரதராஜ '' கிண்ணம் மேலும் மூன்று  மல்யுத்த வீரர்களும் இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதுகளை வென்றனர்.

2011 இல் மகளிர் மல்யுத்த அணியின் உருவாக்கம்இலங்கை விமானப்படை  மல்யுத்த அணியில் மற்றொரு மைல்கல்லை குறிக்கிறது.

விமானப்படை பெண்கள் மல்யுத்த வீராங்கனைகள் 2018 ஆம் ஆண்டின்   பாதுகாப்பு சேவைகள் சாம்பியன்ஷிப் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் விமானப்படை  மல்யுத்த வரலாற்றில்  இன்னும் ஒரு  மைல் கல்லை எட்டினர் .

இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் மற்றும் விமானப்படை  துணைத்தளபதி  எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பதிரன மற்றும் பணிப்பளர்கள்  விமானப்படை  மல்யுத்த விளையாட்டு பிரிவின்  தலைவர்  எயார் வைஸ் மார்ஷல்   வீரசிங்க  மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர் .

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை