இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இல 07 ஹெலிகாப்டர் படை பிரிவு அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது.

2019-09-30 11:05:57
இல  07 ஹெலிகாப்டர் படை பிரிவு  அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது.
ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல  07 ஹெலிகாப்டர் படை பிரிவு  அதன் வெள்ளி விழாவை கடந்த 2019 செப்டம்பர் 23ம் திகதி கொண்டாடியது.

எண் 07 ஹெலிகாப்டர் படைபிரிவின்  ஹெலிகாப்டர் விமானிகளின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறதோடு  பெல் 212 மற்றும்,  பெல் 206 விமானத்துடன் ஆரம்பிக்கப்பட்ட 1994, செப்டம்பர் 23ம் திகதி இந்த படைப்பிரிவு இல  401 படை அணியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படைப்பிரிவு   1993 மார்ச் 23ம் திகதி  இல 07 ஹெலிகொப்டர்  படைப்பிரிவாக மற்றம் அடைந்தது

எண் 07 ஹெலிகாப்டர் படைபிரிவானது  வான் பயணத்துடன் யுத்தகாலத்தில்,   சமாதான செயற்பாடுகளுக்கும் மற்றும் இரண்டாம் நிலை விமான பயிற்சி, வான் ஆயுதப்படைப்பிரிவினரின் பயிற்சி ,ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறைக்கு இராணுவ பயிற்சி, விமான பராமரிப்பு பயிற்சி,ஒரு பயிற்சி சக்தியாக செயற்படுகிறது.

 மனிதாபிமான நடவடிக்கையின் போது இல  7 ம் படைபிரிவு வழங்கிய ஆதரவு ஈடு இணையற்றது, நாட்டில் ஏற்படும் வறட்சி காலத்தில் மக்களுக்காக  பெரும் சேவையாற்றியுள்ளது நாட்டுக்காக செய்த சேவையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜனாதிபதிவர்ணம்  கிடைக்க பெற்றது.

நினைவுதினத்தை முன்னிட்டு அன்றயதினம் இல 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவின் அணிவகுப்பு மைதானத்தில்  காலை பரீட்சனை அணிவகுப்பு கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  குணவர்தன அவரகளினால்  பரீட்சிக்கப்பட்டதுடன்  அந்த நிக்லாவில் அதிகாரிகள் படைவீரகள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து படைப்பிரிவின் அணைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பில்  நட்புரீதியான சந்திப்பும் இடம்பெற்றது இதன்போது  ஹிங்குரகோட  விமானப்படை தள  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் டயஸ் அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.

அதன்போது  அன்றுதொடக்கம் இன்றுவரை  இப்படைப்பிரிவில் கடமையாற்றி நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூறப்பட்டது. படைப்பிரிவின் எதிர்கால பணிகள் மற்றும் அதன் ஊழியர்களின் நல்வாழ்வுக்காக  பௌத்த தர்ம  ஆசீர்வாதம் பெறும் நோக்கில்  போசத்தா விகாரையில் ஒரு போதி பூஜை நடைபெற்றது.


join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை