இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

2009 ஆம் வருடத்தின் தலைசிறந்த விமானி

2010-12-13 09:19:18
2009 ஆம் வருடத்தின் தலைசிறந்த விமானி
2009 ஆம் வருடத்தின் தலைசிறந்த விமானியாக இரத்மலான விமானபடை முகாமின் (வான் வானொலி) பிரிவின் செவை புரியும் 16664 ப்லைட் சார்ஜண் திஸாந்த டப்லிவ்.எச்.கெ அவர்கள் பரிசுப்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தற்போதைய பாதுகாப்பு மன்றத்தின்  பிரதானியும்  விமானப்படை தளபதியுமான 'எயார் சீப் மார்சல்' ரொஷான் குணதிலக அவர்கள் இதற்கு தலைமை தாங்கினார். இவ்வருத்தின் விமானபடையின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திக்காகவும் செவை புறிந்தவர்களை கொளரவிக்கும் பொருட்டு இந்த பரிசு வழங்கும் வைபவம் இன்று (2010 - டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி) கட்டுனாயக அடிவார முகாம் (அஸ்ட்ரா) மன்றபத்திள் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

வானூர்தி இயல் பொறியியல், பொது பொறியியல், மின்னணுவியல் தொலைத்தொடர்பு பொறியியல்,கட்டடப் பொறியியல், தளவாடங்கள், நிர்வாகம், சுகாதாரம் / பல் மருத்துவ சேவை, தரை செயல் முறை ஆகிய பிரிவுகளின் செவை புறியும் அங்கத்தினர்களின் “2009 ஆம் வருடத்தின் தலைசிறந்த விமானிகள்” தேர்ந்து எடுக்கப்பற்றனர்.

துணைச் வணிகங்களான வான் செயல் முறை, தீயணைப்பவர், உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர், வான் நாய் கையாளுதல், தகவல் தொழில் நுட்பப் பணியாளர், விமானபடை காவல் துறை, வேளாண் தொழில் பிரிவு, இசைக்கலைஞர்கள் ஆகிய பிரிவுகளின் தலைசிறந்த விமானியாக வேளாண் தொழில் பிரிவின் ப்லைட் சார்ஜண் விஜேசிங்க எ.எஸ்.எஸ் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பற்றார், அத்துடன் இவரை வைபவத்தின் பிரதம அதிதியான தற்போதைய பாதுகாப்பு மன்றத்தின்  பிரதானியும்  விமானப்படை தளபதியுமான 'எயார் சீப் மார்சல்' ரொஷான் குணதிலக அவர்கள் விருது வழங்கி கௌரவித்தார்.

மேலும், மிகசிறந்த ஆராய்ச்சி குழுக்களாக முதலாம் இடத்தை 09 ஆம் உலங்கு வானுர்தி படையணிப் பிரிவும், இரண்டாம் இடம் ஜெட் விமானப் பிரிவும், மூன்றாம் இடத்தை 32 ஆம் ”நில அடிபடை வான் பாதுகாப்புப் படை” பிரிவும் பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிகழ்வின் விருந்தினர்களாக மேலாளரின் அலுவலர் எயார் வைஸ் மார்ஷல் பி.பி பிரேமசந்திர அவர்களும், மேலாளரின் துணைத் அலுவலர் எயார் வைஸ் மார்ஷல் எச்.டி அபேவிக்ரம அவர்களும், சுகாதார சேவை  இயக்குநர் எயார் வைஸ் மார்ஷல் என்.எச் குனரத்ன அவர்களும், கட்டுநாயக்க அடிவார முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமதோர் சி.ஆர் குருசிங்க அவர்களும், ஏற்பாட்டுகுழு தலைவரும் வானூர்தி இயல் பொறியியல் துணை இயக்குநரும்மான எயார் கொமதோர் எல்.எச்.எ சில்வா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் விமானபடை முதன்மை ஆணை அதிகாரி ஜயசுன்தர அவர்களும், ஆணை அதிகாரி திருமதி நிலந்தி அவர்களும்  கலந்துகொன்டார்கள்.               

தலைசிறந்த விமானி விருது பெற்றொரின் விபரம்

தரை செயல் முறை பிரிவு
1495 சார்ஜண் வேரக எம்.எம்.ஆர்.யு.ஜெ

சுகாதாரம் / பல் மருத்துவ சேவை பிரிவு
13616 ஆணை அதிகாரி டப்லிவ்.பி.எ.எஸ் ரொத்ரிகொ  

நிர்வாகப் பிரிவு
12031 முதன்மை ஆணை அதிகாரி எஸ்.எம்.எ.புஷ்பகுமார

தளவாடங்கள் பிரிவு
13222 ஆணை அதிகாரி எ.ஏவாவித்தாரன

கட்டடப் பொறியியல் பிரிவு
14787 ப்லைட் சார்ஜண் ஏகனாயக ஈ.எம்.எ.பி

மின்னணுவியல் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவு
15664 ப்லைட் சார்ஜண் திஷாந்த டப்லிவ்.எச்.கெ

பொது பொறியியல் பிரிவு
7251 முதன்மை ஆணை அதிகாரி பி.டி.டப்லிவ்.டி சமரனாயக்க

வானூர்தி இயல் பொறியியல் பிரிவு
14723 ப்லைட் சார்ஜண் அசிந்தக ஜெ.என்.டி

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை