02வது கொழும்பு பிரீமியர் லீக் ( சீ .பீ .எல் ) டீ -10 இறுதி போட்டியில் போட்டிகளின் ஆர்.எஸ்.எப். சலஞ்சரஸ் அணியினர் வெற்றி கிண்ணத்தை சுபீகாரித்தனர்.
1:50pm on Saturday 14th September 2019
கொழும்பு   விமானப்படை தளம்  02  முறையாக நடத்திய  கொழும்பு  பிரீமியர் லீக் ( சீ .பீ .எல் ) போட்டிகள்   கொழும்பு  ரைபிள் கிறீன் மைதானத்தில் கடந்த 2019 ஆகஸ்ட் 20ம் திகதி தொடக்கம் செப்டம்பர் 10 திகதி  வரை இடம்பெற்றது.

40 அணிகள் பங்குபற்றிய இந்த போட்டிகளால் 04 அணியினினர்  அரையிறுதிக்கு தெரிவுசெய்யப்பட்டனர் இந்த போட்டிகள் செப்டம்பர் 09ம் திகதி இடம்பெற்றது

இந்த அரையிறுதி போட்டியில்  ஆர்.எஸ்.எப்.  சலஞ்சரஸ் எதிர்  ஆர்.எஸ்.எப்.  எலிமெண்ட் அணியினரும் லயன் ஹார்ட் எதிர் பிளாக் ஈகிள்  ஆகிய அணியினர் மோதிக்கொண்டனர்  இதன் இறுதி போட்டிக்கு ஆர்.எஸ்.எப்.  சலஞ்சரஸ் மற்றும் பிளாக் ஈகிள்  அணியினர் தெரிவுஸ் செய்யப்பட்டனர்.

 இதன் இறுதிப்போட்டிகள் 2019 செப்டம்பர் 10ம் திகதி  இரவு நேர போட்டியாக  கொழும்பு  ரைபிள் கிறீன் மைதானத்தில்  இடம்பெற்றது  இந்த போட்டியில்    ஆர்.எஸ்.எப்.  சலஞ்சரஸ் அணியினர் வெற்றிவாகையை  சூடிக்கொண்டனர்.  

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் விமானப்படை  பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகளை படைவீரர்கள் உட்பட பங்குபற்றிய அணியினர் சகிதம் கலந்துகொண்டனர்.  

மேலதிக வெற்றி விபரங்களை  ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.

airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES
© 2021 Sri Lanka Air Force Directorate of Information Technology . All rights reserved