விமானப்படையின் புத்தாண்டு சந்தை - 2012

Published on: 2012-04-26 09:36:51
விமானப்படையின் புத்தாண்டு சந்தை - 2012
இலங்கை விமானப்படையானது 2012 சிங்கள மற்றும் ஹிந்து புத்தாண்டினை முன்னிட்டு விஷேட சந்தையொன்றினை இன்று அதாவது 11.04.2011ம் திகதியன்று கொழும்பு விமானப்படை முகாம் "ரைபல் கிறீன்" மைதானத்தில் அதன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தது.

எனவே இங்கு பிரதம அதிதியாக இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம மற்றும் அவரது பாரியார் திருமதி. நீலிகா அபேவிக்ரம உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இங்கு பாரம்பரிய முறைப்படி  மு.ப. 10.15 மணியளவில் பிரதம அதிதி குத்துவிளக்கு ஏற்றி சந்தையினை ஆரம்பித்து வைத்ததுடன், நாடெங்களிலும் உள்ள விமானப்படை முகாம்களில் இருந்தும் சுமார் 75 கடைத்தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டிருந்த அதேநேரம் ஒவ்வொரு முகாம்களில் இருந்தும் வெவ்வேறு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பித்தக்க விடயமாகும்.