விமானப்படை சைக்களோட்டபோட்டியின் முதலாவது கட்டம் நிறைவடைந்தது
7:23pm on Thursday 20th January 2011
2011 இலங்கை விமானப்படையின் முதற்கட்ட சைக்களோட்டப்போட்டி 93அனுபவமிக்க வீரர்கள் மற்றும் 20 சாதாரண வீரர்களுடன் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டு கதுருவளையில் நிறைவுபெற்றது.

இப்போட்டிக்காக தென்மாகண சைக்களோட்டக்கழகம்,'சாம பாபதி'கழகம்,'ஸ்டூரூவ் எரோ'கழகம், கொலன்னாவ விளையாட்டு கழகம்,துறைமுக அதிகார சபை கழகம்,தெகிவல விளையாட்டு கழகம் மற்றும் விமானப்படை,தரைப்படை,கடற்படை,பொலிஸ் உட்பட தனிப்பட்ட வீர்ரர்களும் கலந்துகொண்டமை விஷேட அம்சமாகும்.

எனவே போட்டியானது இரு பிரிவுகளாக ஆரம்பிக்கப்பட்டது ,அதில் 90 போட்டியாளர்களுக்கான போட்டியினை வவுனியா முகாமின் கட்டளை அதிகாரி 'எயார் கொமடோர்'கே.எப்.ஆர்.பெரேரா ஆரம்பித்து வைத்ததுடன், 20 போட்டியாளர்களுக்கான போட்டியினை உதவி பொலிஸ் ஆனையாளர் பிரஸன்ன நானயக்கார ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .

மேலும் சாதாரண போட்டியாளர்களின் போட்டி நிறைவு சமிஞ்சையை 'விங் கமான்டர்'எச்.யு.ஜயவீரவினால் அநுராதபுரத்தில் வைத்து வழங்கப்பட்டதுடன்,ஏனைய வீரர்களுக்கான போட்டி நிறைவு சமிஞ்சையை சுமார் 159 கி.மி. தூரத்தினை கடந்த பின் கதுறுவலையில் வைத்து ,கிங்குரங்கொடை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி வழங்கி வைத்தார் .

எனவே இதன் அடிப்படையில் கதுறுவலையை அடைந்த முதல் நான்கு வீரர்கள் மற்றும் ஏனைய வெற்றியாளர்களின் விபரங்கள் வருமாரு.

1.டினேஷ் தனுஷ்க (விமானப்படை)
2.கயான் சஞ்சீவ (கடற்படை)
3.ஜானக விஜேசூரிய(தரைப்படை)
4.புத்திக வர்னகுலசூரிய(விமானப்படை)

முதலாவது தூர எல்லை வெற்றியாளார்கள்- திரப்பனை
1.அஸன்க பிரதீப் குமார-(தரைப்படை)
2.டிலீப பிரபாத்-(தரைப்படை)
3.ஜகத் குமார-(பொலிஸ்)

இரண்டாவது தூர எல்லை வெற்றியாளார்கள்-மின்னேரிய
1.புத்திக வர்ணகுலசூரிய-(விமானப்படை)
2.நவீன் ருசிர-(விமானப்படை)
3.அஸேல சிசிர குமார-(தரைப்படை)

சாதாரண போட்டி வீரர்களின் வெற்றியாளர்கள்.
1.டி.துரைராசா ராஜின்
2.பி.இரனோதாஸ்
3.எம்.ராஜ குமார்
4.கே.லோகேஷ்வரன்
5.அஜந்த குமார் போன்ற வீரர்கள் ஆவர்.

அனுபவமிக்க வீரர்கள் பங்குபற்றும் புகைப்படங்கள்



சாதாரண வீரர்கள் பங்குபற்றும் புகைப்படங்கள்



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை