ஷிரீ மகா போதி கிளையொன்று விமானப்படை விமானம் மூலம் இந்தியாவின் புத்தகயாவுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
8:23am on Monday 21st February 2011
அநுராதபுரத்தில் உள்ள ஷிரீமகா போதி கிளையினை மீண்டும் இந்தியாவில் நடுவதற்காக வேண்டி விமானம் மூலம் புத்தகயாவுக்கு  கொண்டு செல்வதற்கான வசதிகளை இலங்கை விமானப்படை மேற்கொண்டது.

இதற்கான வைபவம் வவுனியா விமானப்படை முகாமில் 09.02.2011 ம் திகதியன்று இடம்பெற்றது மேலும் இக்கிளையினை கொண்டு செல்வதற்காக வேண்டிய நடவடிக்கைகளை வவுனியா முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்"  ரோகித பிரநாந்து பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

"ரங்ஸி வேகய" எனும் விஷேட பெரஹெர மூலம் இம்மரக்கிளை "எயார் கொமடோர்" ரோகித பிரநாந்துவினால் ,வவுனியா ஷிரீ போதி தக்ஷினாராமய விகாரையின் பீடாதிபதி தேரருக்கு அநுராதபுரத்தில் இருந்து கொண்டு செல்ல ஒப்படைத்தார்.

 மேலும் இவ்வைபவத்துக்காக சியம்பளாகஸ்வெவ ஷிரீ விமலாநந்த தேரர் மற்றும் வன்னி பாதுகாப்பு பிரிவின் கட்டளை அதிகாரி "மேஜேர் ஜென்ரல்"சுமேத பெரேரா ஆகியோர் கலந்து கொண்ட அதேநேரம் வவுனியா மாவட்ட செயளாலர் திருமதி.சாள்ஸ் உட்பட வன்னி மாவட்ட உபபொலிஸ்மாஅதிபர் பிரசந்த நானயக்கார என பலரும் கலந்துகொண்டமை விஷேட அம்சமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை