விமானப்படையின் கைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அறிவிப்பு.
6:51pm on Thursday 24th February 2011
இலங்கை விமானப்படையின் 60வது ஆண்டு நிறைவுவிழாவினை முன்னிட்டு கைப்பந்தாட்டப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்படுள்ளதுடன் ,இதனை உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடக சந்திப்பொன்று இன்று மாலை அதாவது 21.02.2011ம் திகதியன்று விமானப்படை தலைமையகத்தில் நடைப்பெற்றது.

மேலும் இச்சுற்றுப்போட்டி தரைப்படை, கடற்படை,விமானப்படை, அம்பாறை மாவட்ட அணி மற்றும் சிறைச்சாலை ஆகிய அணிகளின் பங்கேற்புடன், எதிர்வரும் 24ம், 25ம்,திகதிகளில் கொழும்பு "ரைபல்கிறீன்' மைதானத்தில் நடைபெற இருப்பதோடு இது இலங்கை கைப்பந்து சம்மேளனத்தினால் கண்கானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இதன்முதற்போட்டியானது விமானப்படை மற்றும் தரைப்படைக்கிடையில் சதுக்கம் ஒன்றிலும் அதேநேரம் கடற்படை மற்றும் அம்பாறை அணிகளுக்கிடையிலான போட்டி சதுக்கம் இரண்டிலும் நடைபெறவிருக்கின்றது, போட்டியானது வழமையாக காலை 8 மணியளவிலும் ,மாலை 3 மணியளவிலும் நடைபெறவிருப்பதோடு , இறுதிப்போட்டியானது மாலை 7.30 தொடக்கம் 9.00 மணி வரை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இப்போட்டிக்காக நாட்டின் முன்னனி ஆடைஉற்பத்தி நிறுவனமான 'பிரான்டிக்ஸ் லங்கா' நிறுவனம் அனுசரனை வழங்க இருப்பதோடு , முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தினை பெறுபவர்களுக்கு கிண்ணங்களும் அதேநேரம் சிறந்த வீரர் உட்பட கலந்துகொண்ட அனைத்து வீரர்களுக்காகவும் பதக்கங்களும் வழங்கப்படவிருக்கின்றமை விஷேட அம்சமாகும்.

எனவே இவ்விளையாட்டானது உள்ளக ,வெளியக அரங்குகளில் விளையாட முடியும் என்பதோடு ,இவ்விளையாட்டினை 2008ம் ஆண்டு விமானப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அதேநேரம் ஏற்கனவே விளையாடப்பட்டும் இருக்கின்றது ,மேலும் இது பாதுகாப்பு சேவைகள் விளையாடுப்போட்டியிலும் இணைத்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும் .

அதேபோன்று இங்கு வருகைத்தந்த இலங்கை ஒலிம்பிக்குழு மற்றும் கைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஹேமசிரி பெர்னான்டு தனது பாராட்டினை தெரிவித்துக்கொண்டதுடன் முப்படைகளினாலும் இவ்வாறான விளையாட்டுக்கள் ஊக்குவிக்கப்படுவது மிக முக்கியமானதொரு அம்சமாகும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கை விமானப்படையின் கைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர்'குரூப்கெப்டென்' ஜனக நானயக்கார ,செயளாலர் 'விங் கமான்டர்'சமந்த வீரசேகர மற்றும் இலங்கை விமானப்படையின் விளையாட்டு கழகத்தின் செயளாளர் 'குறூப் கெப்டன்' ரொஷான் பியங்வில ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட துடண், தரைப்படை,கடற்படை,பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை