விமானப்படை முகாம்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப்போட்டி.
3:49pm on Tuesday 5th April 2011
2011 முகாம்களுக்கிடையிலான விமானப்படை உதைப்பந்தாட்டப்போட்டியில் சீனக்குடா விமானப்படையணியை வீழ்த்தி, கடுநாயக்க விமானப்படை "ரெஜிமென்ட்" அணி வெற்றியீட்டியது ,இவ் வெற்றியானது "பெனல்டி" முறையில் 4- 2 எனும் புள்ளி வித்தியாசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 போட்டியானது 01.04.2011ம் திகதியன்று கொழும்பு- 02ல் அமைந்துள்ள உதைப்பந்தாட்ட சதுக்கத்தில் நடைப்பெற்றது.

 எனவே இரு அணிகளும் முதற்சுற்றில் எந்தவொரு கோல்களையும் பெறாவிட்டாலும் இரண்டாம் சுற்றில் கடுநாயக்க விமானாப்படை "ரெஜிமென்ட்" அணியின் LAC ருவந்த  மற்றும் LAC விமலரத்ன ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்கள் வீதம் பெற்ற அதேநேரம் சீனக்குடா முகாமின் AC சிரியந்த மற்றும் கோப்ரல் ஜயந்த ஆகியோரும் தலா ஒவ்வொரு கோல்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.

மேலும் இரு அணிகளும் சம கோல்களை பெற்றுக்கொண்டதனால் வெற்றியை தீர்மானிப்பதற்காக "பெனல்டி" முறை கொண்டுவரப்பட்டதுடன் இதில் கடுநாயக்க "ரெஜிமென்ட்" அணியானது 2 கோல்களை மேலதிகமாக பெற்று வெற்றியை சுவீகரித்துக்கொண்டது.

அத்தோடு இச்சுற்றுப்போட்டியில் சிறந்த வீரராக கடுநாயக்க "ரெஜிமென்ட்" பிரிவின் AC நாணயக்கார தெரிவுசெய்யப்பட்டதுடன் ,சீனக்குடா முகாமின் AC உஸாம் சிறந்த கோல் காப்பாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்று அதிகாரி திரு. அநுர டி சில்வா கலந்துகொண்ட அதேநேரம் விமான பொறியியல் இயக்குநரும் மற்றும் இலங்கை விமானப்படை உதைப்பந்தாட்டகழகத்தின் தலைவருமான "எயார் வைஸ் மார்ஷல்" ஜயந்த குமாரசிரி உட்பட அதன் செயலாளர் "குரூப்கெப்டன்" சமன் கோடகே, " எயார் கொமடோர்" கிஷான் யஹம்பத்(DGO) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை