போர்வீரர்களுக்காக திறக்கப்பட்ட 'மஹிந்து செத் மெதுர'
4:29pm on Tuesday 31st May 2011
நாட்டை பயங்கரவாத்தில் இருந்து காப்பற்ற தமது அவயவங்களை இழந்த போர்வீரர்களின் நலன்கருதி, அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள சொகுசான அனைத்து வசதிகளையும் கொண்ட “மஹிந்து செத் மெதுர” எனும் தங்குமிடம் நேற்று(மே-30) அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

தெகிவல அத்திடியவில் அமைக்கப்பட்டுள்ள இத் தங்குமிடமானது பாதுகாப்புப் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்‌ஷ அவர்களின் ஆலோசனையில் தெற்காசியாவிலே அமைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டடமாகும். எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், நாட்டிற்காக தம்மையே இழக்க முன்வந்த இவர்களை, மிகவும் சிறந்த முறையில் பராமரிப்பது நாட்டு மக்களது கடமையாகும். பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு படையினராலும் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

23 ஏக்கரில் அருமையான பசுமைபொங்கும் விதத்தில் இயற்கை அழகுடன், அத்திடிய பறவைகள் சரணாலயத்தில் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள இச் சொகுசு தங்குமிடமானது, 135 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்படுள்ளது.

நாட்டிற்காக அளப்பறிய சேவையாற்றிய இவர்களுக்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இலங்கை நன்கொடையாளர்கள் தமது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் திரு.கோடாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற அமைச்சர்கள், பாதுகாப்பு பிரதானி உட்பட முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அங்கவீனமுற்ற போர்வீரர்களின் உறவினர்களும் இங்கு கலந்துகொண்டனர்.

பிரதி: பாதுகாப்பு அமைச்சு.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை