2018 ம் ஆண்டுக்கான கொழும்பு வான் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு
6:31pm on Wednesday 31st October 2018
இலங்கை விமானப்படையின்  04 வது கொழும்பு  வான் மாநாடு  கடந்த 2018 அக்டோபர்  18 ம் திகதி  ரத்மலான  ஈகிள்ஸ் லாக்கடைட் பேங்கட் & மாநாட்டு மண்டபத்தில்  இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின்  ஜனாதிபதி  அதி மேதகு  மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது

வனவிலங்குகள்   மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்  பீல்ட் மார்ஷல்  சரத் பொன்சேகா  அவர்களும், அரச பாதுகாப்பு அமைச்சர் கெளரவ ருவான் விஜேவர்தன அவர்களும்,  பாதுகாப்பு செயலாளர் கபில் வைத்யரத்ன அவர்களும்,வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் ,  பாதுகாப்பு பிரிவின்தளபதியும்,கடற்படை தளபதி  போலீஸ்மா அதிபர் அவர்களும் முன்னாள் விமானப்படை தளபதிகள் மற்றும் முப்படை அதிகாரிகள்  சிரேஷ்ட  அரச அதிகாரிகள் வெளிநாட்டு படை தளபதிகள் மற்றும்  உயர் பிரமுகர்கள்  இந்த நிகழ்வில் பங்கு கொண்டனர்.

ஆரம்ப உரையினை  இலங்கை விமானப்படை  பயிட்சி பொறுப்பு உயர அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  வீரசிங்க அவர்கள் வழங்கினார்  அதன் பின் இலங்கை விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களால் ( 'இலங்கையின் புவி மூலோபாய முக்கியத்துவத்தை அடைவதற்கான வான்  மூலோபாயம் )  என்ற தலைப்பில்  உறை நிகழ்த்தப்பட்டது  தொடர்ந்தும் பேசிய விமானப்படை  தளபதி அவர்கள்    ''2025 ம் ஆண்டின் இலக்கு''  எனும்  அரசாங்கத்தின் '' தேசிய இலக்கு 2025''  காக  இலங்கை விமானப்படை  சார்பாக  வான் பாதுகாப்பை  அதிகரித்தல் தொடர்பாக  இடம்பெற்று வரும்  திட்டம்கள் பற்றியும் விளக்கம் அளித்தார் .   

இதன் போது  அதிமேதகு  ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு நினைவு சின்னமும் இலங்கை விமானப்படை தளபதி அவர்களால்  வழங்கப்பட்டது   அன்றய தினம்  சுய நன்மைகளைப் பயன்படுத்துதல் " எனும் தலைப்பில்  வான் பாதுகாப்பு சம்பந்தமாக  புவியியல் நிலைப்பாட்டு என்பவற்றை  எவ்வாறு  பாதுகாத்தல்   எனும் ஒரு விவாதமும் எயார் வைஸ்  மார்ஷல் பிரசன்ன  பாயோ அவர்களால் நிகழ்த்தப்பட்டது    

அதே போல்   '' அடுத்த  தலைமுறையில்  விமானப்படை'' எனும்  தலைப்பில்   ஒரு சிறிய கடல் நாடுக்கான விமான மூலோபாயம் என்ன? என்ற கருத்தில் இங்கிலாந்து  விமண்படை அதிகாரி குருப் கேப்டன்  பிரேசர் நிக்கல்சன் அவர்கள் உரை நிகழ்த்தினார்  அதேபோல்  இன்னும் சில தைப்பில் மற்றும் சிலர் கருத்துக்களை  தெரிவித்தனர்  நாளை  இதன் இறுதி கட்ட அமர்வு இடம்பெறும் என்று  அறிவிக்க பட்டது.    

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை