அம்பாறை இலங்கை விமானப்படை தளத்தின் 29வது வருட நினைவுத்தின நிகழ்வுகள்.
4:40pm on Monday 10th December 2018
அம்பாறை   இலங்கை விமானப்படை தளத்தின் 29 வது  வருட நினைவு தினத்தை முன்னிட்டு  கடந்த  2018  நவம்பர்  25 ம் திகதி  இடம்பெற்றது      இதன்  முதல் நிகழ்வாக  காலை  அணிவகுப்பு  நிகழ்வு இடம்பெற்றது  அம்பாறை    விமானப்படை  கட்டளை இடும் அதிகாரி   குரூப் கேப்டன்  எச் டப்லிவ் சந்திம  அவர்களினால்  அணிவகுப்பு பரிட்சனை இடம்பெற்றது இதன் போது உரை நிகழ்த்திய அம்பாறை    விமானப்படை  கட்டளை இடும் அதிகாரி  இந்த விமானப்படை தளத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்திருந்தார் அம்பாறை விமானப்படை தளத்தின் வரலாற்றில் அவரை சுருக்கமாக விளக்கினார்.நாட்டின் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கை மற்றும் இயற்கை  பேரழிவின் போது விமானப்படையின் பங்களிப்பு பற்றி  விளக்கம்  அளிக்க பட்டது.  

இதன்போது பொது சிரமதான வேலைகள்  அம்பாறை பொதுமயாணம்  மற்றும்  டி.எஸ். சேனநாயக்க தேசிய பாடசாலை, புத்தங்கலா விஹாரை  மற்றும் தமன பிராந்திய வைத்தியசாலை போன்ற இடம்களில் இடம்பெற்றது  அதனை தொடர்ந்து   மென்பந்து கிரிக்கெட் போட்டி    நிகழ்வும் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து அம்பாறை    விமானப்படை  கட்டளை இடும் அதிகாரி   குரூப் கேப்டன்  எச் டப்லிவ் சந்திம  அவர்களினால்  வழிகாட்டலின் கீழ் அனைத்து அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் அனைவரின் பங்கெடுப்பில் யுத்தத்தினால்  உயிர் இழந்த  விமானப்படை  வீரர்கள் மாற்றும்  சக படைவீரர்களின் ஆத்ம சாந்திக்காக சர்வ ராத்திரிபூஜை நிகழ்வும்    அடபிரிகர  பூஜை  நிகழ்வும் தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை