சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் பாதுகாப்புக்கான 'வான் கண்காணிப்பு செயற்திட்டங்கள்' பற்றிய பயிற்ச்சி பட்டறை.
12:06pm on Thursday 27th December 2018
விமானப்படை புலனாய்வுத்துறை மற்றும் விமானப்படை  கண்காணிப்பு குழு மற்றும் மத்திய  சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு  அமைப்புடன் இணைந்து   சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு பற்றிய ஒரு நாள் பட்டறை கடந்த 2018  டிசம்பர் 14ம் திகதி  அன்று பத்தரமுல்லவின் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை திணைக்களத்தில்  நடைபெற்றது.

  இந்த நிகழ்வு மத்திய  சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு  அமைப்பின் பணிப்பாளர் சந்ரரத்ன   பல்லேகம அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதான ஆலோசகர்களாக  நனோ  தொழில்நுட்ப    மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி, நனோ தொழில்நுட்பம் ஆலோசகர் திரு.மஞ்சு குணவர்தன, வான்  மற்றும்  கடல் மூலோபாய கட்டளை அதிகாரி எயார் கமாண்டர்  வாசகே  அவர்களும் , வான்  கண்காணிப்பு அதிகாரி  ஸ்கொற்றன்  ளீடர்   மாலிந்த  கம்லஸ்சகே  ஆகியோர்  கொண்டனர்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக  டோனர் கேமரா விமானம் மூலம்  வான் கண்காணிப்பு  முறையை மேலும் விருத்தியடைய செய்யும் நோக்கில் மக்களின் தேவை கருதி  பற்றி  வருகை  தந்த அனை வருக்கும் விளக்கம் அளித்தனர்.
 
இந்த வேலைத்திட்டம்  நாடுபூராகவும் உள்ள  மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மற்றும்  விமானப்படையுடன் இணைந்து  இந்த திட்டத்தை ஒருங்கிணைத்து  நடாத்த உள்ளனர்.
  


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை