முகாம்களுக்கிடையிலான நீச்சல் போட்டி மற்றும் நீர் விளையாட்டு
9:35am on Wednesday 3rd August 2011
2011 முகாம்களுக்கிடையிலான நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுப் போட்டியில் 153 புள்ளிகளை பெற்று அநுராதபுர முகாம் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட அதேநேரம் பெண்கள் பிரிவில் கொழும்பு விமானப்படை அணி முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

போட்டியானது 29.07.2011ம் திகதியன்று கடுநாயக விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.மேலும் இப்போட்டிக்கு அனைத்து முகாம்களிலும் இருந்து சுமார் 300 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் போட்டியானது 26.07.2011 - 29.07.2011ம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இந்நிகழ்வுக்கு கடுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி சி.ஆர். குருசிங்க , விமானப்படை நீச்சல் சங்கத்தின் தலைவர் எயார் கொமடோர் சி்.பி. வெலிக்கல ,குறூப் கெப்டென் ஜே.ஆர். ஹேமசிங்க , குறூப் கெப்டென் சஞ்சய சில்வா, குறூப் கெப்டென் கே.ஆர். எரமுடுகல்ல என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை