லக்கல தீ விபத்தினை கட்டுப்படுத்திய விமானப்படையினர்
9:19am on Thursday 4th August 2011
கடந்த 01.08.2011ம் திகதியன்று பி.பி.3 மணியளவில் மாத்தளை வில்கமுவ பிரதேசத்துக்கு அருகாமையில் உள்ள லக்கல வனப்பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை இலங்கை விமானப்படை ஹிங்குரங்கொடை முகாமின் பெல்.212 ஹெலிகொப்டர் மூலம் ,இல.7ம் பிரிவினர் அனைத்தனர்.

மேலும் இங்கு பெல்.212 ஹெலிகொப்டரினால் "பம்பி" பக்கட்களின் உதவியுடன் அனைக்க முடிந்ததுடன் இப்பணியானது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கை விமானப்படைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விமானப்படையின் விமானிகளான "ஸ்கொட்ரன் லீடர்" சமில கிரிபிடிய மற்றும் "பிளைட்  லெப்டினென்ட் " துமிந்த மாரசிங்க ஆகியோர்கள் சுமார் 7 KM உயரத்திலிருந்து அனைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு மாலை 5 மணியளவில் வேறு ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் "ஸ்கொட்ரன் லீடர்" பானுக தெல்கககொட மற்றும் "பிளையின் ஒபிஸர்" திலின காடிஆரச்சி ஆகியோர் இதனைத்தொடர்ந்து அனைத்தமை விஷேட அம்சமாகும்.>




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை