24வது விமானப்படை சைக்கிள் ஓட்ட போட்டிகளில் இலங்கை விமானப்படை மகளிர் அணியினர் முதலாம் இடத்தையும் ஆடவர் அணியினர் 02ம் இடத்தையும் பெற்றனர்.
12:24pm on Friday 21st April 2023
இலங்கை விமானப்படையின் 72வது ஆண்டு நிறைவை ஒட்டி " 2023 ஆண்டுக்கான விமானப்படை சைக்கிள் ஒட்டபோட்டிகள் " தொடர்ந்து 24வது முறையாக நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டி 02, 03 மற்றும் 04 மார்ச் 2023 ஆகியதிகதிகளில்  3 கட்டங்களாக நடைபெற்றது.

395.4 கிலோமீற்றர் தூரத்தை கடந்த இந்தப் போட்டியில் நாடளாவிய ரீதியில் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.  இந்த போட்டித்தொரின்  வெற்றியாளராக இலங்கை இராணுவத்தின் சந்தன தயானந்தன ஒட்டுமொத்த பட்டத்தை வென்றார்.

ஒட்டுமொத்த போட்டியில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த கிருஷ்ண நாயக்கோடி நான்காவது இடம் பெற்றார். அணி சம்பியன்ஷிப்பை இலங்கை இராணுவ சைக்கிள் ஓட்டுதல் அணி வென்றது, போட்டித்தொடரில்  விமானப்படை ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை வென்றது.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமான பெண்களுக்கான ஓட்டப் பந்தயம் ஹபரணையிலிருந்து அனுராதபுரம் வரையிலான 84.9 கிலோமீற்றர் தூரத்தையும் கடந்ததுடன், இலங்கை விமானப்படை சைக்கிள் வீராங்கனை தினேஷா தில்ருக்ஷி முதலிடத்தையும், சுதாரிகா பிரியதர்ஷினி இரண்டாமிடத்தையும், இலங்கை கடற்படையின் ஆன் ஷெனாலி பெரேரா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

அனுராதபுரம் விமானப்படை தளத்தில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பிரதம அதிதியாக  இலங்கை விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரன கலந்து கொண்டார்.மேலும் விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, அனுராதபுரம் விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரி  குரூப் கப்டன் ப்ரிமல் பெர்னாண்டோ, மற்றும் அனைத்து அனுசரணையாளர்கள், பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

FINAL RESULTS

Men’s Race
Men’s Team Champion - Sri Lanka Army Team
Men’s Team Runners Up – Sri Lanka Air Force
Overall Men’s Champion – Chandana Dayanandana - Sri Lanka Army
Overall Men’s 2nd Place – Avishka Dilnuwan Madonza – Sri Lanka Army
Overall Men’s 3rd  Place – Suranga Ranaweera – Dehiwala – Mount Lavinia Municipal Council
Sprint Champion – Prabash Madushanka - Sri Lanka Navy

Women’s Race
Women’s team Champion - Sri Lanka Air Force Team
Women’s Runners Up – Sri Lanka Navy
Overall Women’s Champion – Dinesha Dilrukshi - Sri Lanka Air Force
Overall Women’s 2nd Place – Sudarika Priyadarshani -  Sri Lanka Air Force
Overall Women’s 3rd  Place – Anne Shenali - Sri Lanka Navy
Sprint Champion – Dinesha Dilrukshi - Sri Lanka Air Force

Click here to all Results

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை