இரணைமடு விமானப்படை தளத்தினால் விசேட சமூக சேவை செயற்திட்டம் ஒன்று நடாத்தப்பட்டது
12:55pm on Wednesday 4th October 2023
எதிர்வரும் 'உலக சிறுவர் தினத்தை' முன்னிட்டு, 2023 செப்டெம்பர் 22 ஆம் திகதி இரணைமடு விமானப்படைத் தளம்   விசேட சமூக சேவைத் திட்டத்தை நடத்தியது. முகாமைச் சுற்றியுள்ள உள்ளூர் முன்பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வித் தரத்தை மேம்படுத்துவதே முதன்மை நோக்கமாக இருந்தது.  இரணைமடு விமானப்படை தள கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சுலோச்சனா மாரபெருமவின் வழிகாட்டுதலின்படி, கியான்ஷ்யா (மிதுலன்) பாலர் பள்ளி மற்றும் சிறுவர் பூங்காவின் புனரமைப்பு இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு திரு. ஸ்டீபன் கொலின் துரின் மற்றும் அவரது குடும்பத்தினரின் தாராள ஆதரவும் வழங்கப்பட்டது

அதே சமூகப் பங்கேற்பின் ஒரு பகுதியாக, ஹகுரன்கெத்த பிரதேசத்தைச் சேர்ந்த திரு. ஆர்.எம். ரன்பண்டா மற்றும் ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த திரு. ஜே.ஏ.ஜே. சந்திரரத்ன ஆகியோருக்கு 2023 செப்டெம்பர் 13 அன்று கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்காக இரண்டு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.இந்த திட்டம் மிஸ் சிதி சாரா அசானால் உருவாக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை