மத்திய ஆப்ரிக்கா நாட்டின் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப்பிரிவில் கடமையாற்றும் இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குளானது
8:31pm on Sunday 28th January 2024
மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்களில் ஒன்று, 2024 டிசம்பர் 12 ம் திகதி  காலை,  பிரியாவிலிருந்து வடகிழக்கே 140 கடல் மைல் தொலைவில் ஐ.நா அமைதி காக்கும் பணிக்காக பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.  பாதகமான காற்று மற்றும் தூசி நிலைகளின் கீழ் எம்ஐ-17 ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணைகள்   தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி மற்றும் நான்கு பணியாளர்களுக்கு எந்தவித காயமும்  ஏற்படவில்லை.

இச்சம்பவத்தின் பின்னர், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, அவர்கள்  மத்திய ஆபிரிக்க குடியரசில் இருந்து அமைதி காக்கும் அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவை அந்த இடத்திற்கு அனுப்பியதுடன், மேலும்  இலங்கை விமானப்படைத் தலைமையகத்திலிருந்து விசேட விசாரணைக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை