விமானப்படை தளங்களுக்கு இடையிலான இடைநிலை ஹொக்கி போட்டிகள்
10:59pm on Tuesday 23rd April 2024
விமானப்படை தளங்களுக்கு இடையிலான இடைநிலை ஹொக்கி போட்டிகள் கடந்த 2024 பெப்ரவரி  27ம் திகதி  ஏக்கல  விமானப்படை தளத்தில் இடம்,பெற்றது இந்த  நிகழ்வில் விமானப்படை  பிரதி பதவிநிலை பிரதானி எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்கள்  பிரதம  அதிதகியாக கலந்துகொண்டார்.

ஆடவருக்கான 11-பேர்கொண்ட பிரிவில் இலங்கை விமானப்படை  சீனக்குடா கல்விப்பீடம் சம்பியன்ஷிப்பைக் கைப்பற்றியதுடன், இலங்கை விமானப்படை தியத்தலாவ போர் பயிற்சிப் பள்ளி இரண்டாம் இடத்தைப் பெற்றது.இலங்கை விமானப்படை கொழும்புத் தளம் பெண்களுக்கான 7-சி பிரிவில் சம்பியன்ஷிப்பை வென்றது மற்றும் விமானப்படை தளம் கட்டுநாயக்க இரண்டாம் இடத்தைப் பெற்றது.ஆண்களுக்கான 7-சி பிரிவில் இலங்கை விமானப்படை ரத்மலானை முகாம் அணி வெற்றி பெற்றதுடன், இரண்டாம் இடத்தை விமானப்படை சீனக்குடா  விமானப்படைத்தளம் வென்றது.

இந்த நிகழ்வில் விமானப்படை ஹொக்கி சங்கத்தின் தலைவர் எயார் கொமடோர் ஷெஹான் விஜயநாயக்க, விமானப்படை விளையாட்டு சபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிதிகள் கலந்துகொண்டனர்.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை