புதிய சர்வதேச பாலர் பாடசாலை ஏகல விமானப்படை முகாமில் திறக்கப்பட்டது
8:45am on Monday 6th December 2010
இலங்கை விமானப்படை'சேவா வனிதா'அலகினால் விமானப்படை சிவில் மற்றும் படையினரின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக சர்வதேச மட்ட பாலர் பாடசாலை ஒன்று நேற்று முந்தினம் விமானப்படையின் 'சேவாவனிதா'அலகின் தலைவி திருமதி.நெலுன் குணதிலக தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.இப்பாலர் பாடசாலையானது ஏகலவிமானப்படை முகாமிற்கு இன்றியமையாததொன்றாகும்,ஏனெனில்2500 படை வீரர்களை கொண்ட இம் முகாமால்,அதிகமானவர்கள் விவாக விடுதிகளில் வசிப்பவர்களாக இருப்பதனால் ஆகும்.

எனவே முகாமின் கட்டளை அதிகாரி'குரூப் கெப்டன்'ஜனக அமரசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைய'சேவா வனிதா'அலகின் உதவியுடன் இது நிர்மானிக்கப்பட்டது.
2010- செப்- 30ம் திகதி அன்று மிக குறைந்த வளங்கலுடன் ஆரம்பிக்கப்பட்ட இப் பாலர் பாடசாலையானது தற்போது 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்,இது 2011 ஆண்டளவில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.







airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை