பாதுகாப்பு அமைச்சின் செயலகம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர  கோட்டை அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்கு கடந்த 2021 மே மாதம் 18 ஆம் திகதி இடம் மாற்றம் செய்யப்பட்டது

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை தோற்கடித்து 12வது வருட நிறைவையொட்டி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
 இந்த அமைச்சின் செயலகத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமால் குணரத்ன அவர்கள் திறந்து வைத்தார் இந்த வரலாற்று நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன மற்றும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சனபத்திர மற்றும் பொலிஸ் மா அதிபர் திரு சந்தன விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வுகள் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை அமைந்துள்ள பாதுகாப்பு தலைமை கட்டிட வளாகத்தில் திட்ட முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எயர் வைஸ் மார்சல் ரோஷன் பத்திரகே அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை