
"சுவாசம் " வேலைத்திட்டத்தின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு நன்கொடை.
11:49am on Wednesday 19th June 2024
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் "சுவாசம் " திட்டத்தின் கீழ் விஷேட நன்கொடை நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட விமானப் படை வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நன்கொடை திட்டமான “சுவாசம்” உதவித் திட்டமொன்றுக்கு கட்டுநாயக்க, இரத்மலானை, கட்டுகுருந்த, மீரிகம, கொழும்பு, ஏகல, கொக்கல, தியத்தலாவ, வீரவில மற்றும் பாலாவி உள்ளிட்ட விமானப்படை தளங்களால் நன்கொடைகள் வழங்கப்பட்டன.