இலங்கை விமானப்படையின் 74 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, இலங்கை விமானப்படை புனிதமான 'கப்ருக் பூஜை' விழாவை நடத்தியது
2:16pm on Thursday 8th May 2025
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவு தனது 74 வது ஆண்டு நிறைவை விமானப்படைக்கு ஆசீர்வாதம் பெறுவதற்காக "கப்ருக் பூஜை" நடத்தி கொண்டாடியது. இந்த மத விழா 2025 மார்ச் 11 ஆம் தேதி புனித ருவன்வெலி சேயவில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிருஷாந்தி எதிரிசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
அதே மாலையில், ருவன்வெளி சேயவில் 'கிலான்பாச பூஜை'யுடன் மற்றொரு மத ஊர்வலம் நடைபெற்றது.
கப்ருக் பூஜையைத் தொடர்ந்து, மகா விஹார பிரிவேனாவின் துணைத் தலைவர் வணக்கத்திற்குரிய குடகலவெவ ஞானவிமல தேரர் அவர்களால் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.
அனுராதபுரத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கு மிகுந்த நிவாரணம் அளிக்க, விமானப்படை சேவா வனிதா பிரிவு, அனுராதபுரம் விமானப்படை நிலையத்தின் உதவியுடன், ருவன்வெலிசேய வளாகத்தில் பால் மற்றும் கோப்பி அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விமானப்படை தலைமைத் தளபதி, துணைத் தளபதி , விமானப்படை மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது துணைவர்கள், மூத்த அதிகாரிகள், பிற அணிகள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.