இலங்கை விமானப்படையின் பங்களிப்புடனும், இந்திரா டிரேடர்ஸ் குழுமத்தின் நிதி உதவியுடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் புதிய ஐந்து மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய  ஐந்து மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 03.ஜூன் 2025 காலை 08.30 மணிக்கு நடைபெற்றது.  இந்த திட்டம் இலங்கை விமானப்படையின் முழு மேற்பார்வை மற்றும் தொழிலாளர் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது,  மேலும் இதற்கான நிதி பங்களிப்பை இந்திரா டிரேடர்ஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. இந்திரா குமார சில்வா  அவர்கள் வழங்குகிறார்.

நிறமாணிக்கப்படவுள்ள புதிய வார்டு வளாகம்  50,000 சதுர அடி பரப்பளவில் அமையும்,  மேலும் 80 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய  இரண்டு வார்டுகள்,  ஒரு சிறுவர்  அவசர  சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு சிறுவர்  வெளிநோயாளர் கீமோதெரபி பிரிவு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.  இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ நளிந்த ஜயதிஸ்ஸ, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, விமானப்படைபணிப்பகத்தின்  அதிகாரிகள், மருத்துவமனை பணிப்பாளர்கள்  மற்றும் பணியாளர்கள் குழுவினர்  கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை