நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது.
நாட்டில்  ஏற்பட்ட சீரற்ற  வானிலை காரணமாக  இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க  நிவாரண பொருட்களை  ஏற்றிச் வந்த  இந்திய விமானப்படையின் C-130 விமானம் (2025.11.29) இன்று அதிகாலை 01.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுகாதாரப் பொருட்கள் மற்றும்   அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை பெற, இந்திய உயர் ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த ஆலோசகர் (வளர்ச்சி ஒத்துழைப்பு) திரு. மைத்ரே குல்கர்னி மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மன்தீப் சிங் நேகி உள்ளிட்ட இந்திய விமானப்படை அதிகாரிகள் குழுவும், இலங்கை விமானப்படையின் தலைமைத் தளபதி எயார்  வைஸ் மார்ஷல் லசித சுமனவீர உள்ளிட்ட விமானப்படை அதிகாரிகள் குழுவும்   வருகை தந்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை