2025 ஆம் ஆண்டுக்கான ஈகில்ஸ் கோல்ப் மொன்சூன் சாம்பியன்சிப் போட்டித்தொடர்.
அவியானா சிலோன் ஹோட்டல் குழுமத்தின் அனுசரணையுடன் இலங்கை விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் நான்காவது முறையாக ஏற்பாடு செய்த (monsoon cup golf tournament) மொன்சூன்  கோல்ப் கோப்பை தொடர் 2025 ஆண்கள் மற்றும் பெண்கள்   திறந்த கோல்ஃப் போட்டி தொடர் கடந்த (11 ஜனவரி  2026) ம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் உள்ள அழகிய சீனாக்குடா  விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில், இலங்கை விமானப்படை விமான நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம்  எயார் வைஸ் மார்ஷல் தம்மிக டயஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்தப் போட்டித்தொடரில் ஈகிள்ஸ் மொன்சூன் கோப்பைக்காக ஆண் மற்றும் பெண் பிரிவுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டதோடு  மேலும் முப்படை வீரர்களின் திறமையினை வெளிக்கொணரும் வகையில்   ஈகிள்ஸ் மொன்சூன் பாதுகாப்பு சவால் கோப்பைக்காகவும் போட்டியிட்டனர்.
இந்தப் பொடி தொடரில் மொன்சூன் கோப்பைக்காண ஆண்கள் பிரிவில் வின் கமாண்டர் (ஓய்வு பெற்ற) லக்மால் குணவர்தன வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்ததுடன் மகளிர் பிரிவில்  வெற்றிக்கிண்ணத்தை  திருமதி. பிரவீனா துனுவில  பெற்றுக்கொண்டார். அதே தொடரில் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தினை வின் கமாண்டர் (ஓய்வு பெற்ற) நளீன் பெந்தரஆராய்ச்சி பெற்றுக்கொண்டதுடன் மகளிர் பிரிவில் இரண்டாம் இடத்தை திருமதி நிலு ஜயதில பெற்றுக் கொண்டார்.

ஈகிள் மொன்சூன் பாதுகாப்பு சேவை சவால் கிண்ணத்தினை விங் கமாண்டர் அசந்த குணரத்ன பெற்றுக் கொண்டதுடன் இரண்டாம் இடத்தினை இலங்கை கடற்படையை சேர்ந்த லெப்டினல் கமாண்டர் மெவன் பெரேரா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை