75வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொழும்பு விமானப்படை மருத்துவமனையில் கண் திரை அறுவை சிகிச்சைத் திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கொழும்பு விமானப்படை மருத்துவமனையால் 24 மற்றும் 26 மார்ச் 2026 அன்று ஒரு சிறப்பு கண்புரை அறுவை சிகிச்சைத் திட்டம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டு முடிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் பார்வையை மீட்டெடுக்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த நலத்திட்டமானது, விமானப்படை சுகாதார சேவைகள் இயக்குநரகம் மற்றும் சிறப்புரிமை பெற்ற பொது சுகாதார வல்லுநர்களின் வெற்றிகரமான ஒத்துழைப்பின் கீழ் நடத்தப்பட்டது. இந்அறுவை சிகிச்சை பணிகளை குரூப் கேப்டன் (டாக்டர்) அபய ஜெயசேகர, டாக்டர் கசுன் குணவர்தன மற்றும் டாக்டர் மாரி பெர்னாண்டோ ஆகியோர் மேற்பார்வையிட்டு வழிநடத்தினர். குளியாபிட்டிய மற்றும் பாணந்துறை  விமானப்படைப் பிரிவுகளைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் கண் மருத்துவத்தில் அனுபவம் வாய்ந்த செவிலியர் குழுவினரும் இவ்அறுவை சிகிச்சைக் குழுவிற்கு ஆதரவளித்தனர்.

இந்தத் திட்டத்தின் கீழ், மார்ச் 24 அன்று திட்டமிடப்பட்ட 75 அறுவை சிகிச்சைகளில் 73 வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. அதே சமயம், உடல்நலக் காரணங்களால் இரண்டு நோயாளிகளால் பங்கேற்க இயலவில்லை. இதைத் தொடர்ந்து, மார்ச் 26 அன்று மேலும் 20 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால், மொத்த அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்தது.

1st Day

2nd Day
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை