கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இலங்கை விமானப்படை தமிழ் , சிங்கள புத்தாண்டை கோலாகலமாகக் கொண்டாடியது.
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இலங்கை விமானப்படை  10 ஏப்ரல் 2026) "அவ்ருது உத்யானய " என்ற விழாவுடன்  தமிழ்  , சிங்கள  புத்தாண்டைக் கொண்டாடியது.

இந்தக் கொண்டாட்டங்கள் விமானப்படைத் தளபதி, எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் தலைமையில் நடைபெற்றன. விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி கிரிஷாந்தி எதிரிசிங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி, எயார்  வைஸ் மார்ஷல் அமித ஜயமக மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். விமானப்படை மேலாண்மைச் சபையின் தலைமைத் தளபதி மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகளும் தங்கள் துணைவியர்களுடன் அன்றைய நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

பங்கேற்பாளர்களைத் தங்களின் விளையாட்டுத் திறன்களையும் சுறுசுறுப்பையும் வெளிப்படுத்த ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கொண்டாட்டங்கள் மாரத்தான் மற்றும் சைக்கிள் பந்தயத்துடன் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, 'பானையை உடைத்தல்', 'யானையைக்கு கண்வைத்தல் ' மற்றும் 'தலையணை சமர் ' உள்ளிட்ட நேரக்கட்டுப்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.புதுவருட  ஆணழகன்  மற்றும் அழகி  தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகளுடன், 'வழுக்கும் மரத்தில் ஏறுதல்', 'கயிறு இழுத்தல்' மற்றும் 'சாக்கு மூட்டை ஓட்டம்' ஆகியவையும் நடத்தப்பட்டன.

அதிகாரிகள், விமானப்படை வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொது ஊழியர்கள் உட்பட ஏராளமான விமானப்படை வீரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை