கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள கட்டுமான இயந்திரப் பிரிவு தனது 13வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள கட்டுமான இயந்திரப் பிரிவு (15 மே 2026) தனது 13வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்நாளின் நிகழ்வுகள், வழக்கமான பணி அணிவகுப்புடன் தொடங்கின. இதில் பிரிவின் அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்துகொண்டனர். இதனை , கட்டளை அதிகாரியும் விங் கமாண்டர் அரியரத்ன அவர்ககள் ஆய்வு செய்தார்
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், பிரிவு வளாகத்திற்குள் மரம் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பணியாளர்களிடையே ஒற்றுமையையும் தோழமையையும் வலுப்படுத்தும் விதமாக குழு உருவாக்கும் விளையாட்டுப் போட்டி ஒன்றும் நடைபெற்றது. ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டான ஆனந்தபுர அனாதை இல்லத்தில் ஒரு சமூக சேவைத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது, தூய்மைப் பணி நடத்தப்பட்டதுடன், சுமார் 50 பணியாளர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
தற்போது, கட்டுமான இயந்திரப் பிரிவில் இயந்திரப் பொறியியலில் நிபுணத்துவம் பெற்ற ஆறு அதிகாரிகளும், பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்ற 142 விமானப்படை வீரர்களும் உள்ளனர். விமானப்படைத் தலைமையகத்தின் வழிகாட்டுதலின்படி, இலங்கை விமானப்படை மற்றும் பரந்த அரச துறையால் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்களுக்கு ஆதரவாக கனரக இயந்திரங்களையும் டிப்பர் லாரிகளையும் வழங்குவதே இப்பிரிவின் முதன்மைப் பொறுப்பாகும்.