அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின் தளபதி, இலங்கை விமானப்படையின் தளபதியைச் சந்தித்தார்.
அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின் தளபதி, ஜெனரல் கெவின் பி. ஷ்னைடர், 2026 ஜூன் 23 அன்று விமானப் படைத் தலைமையகத்தில், விமானப் படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவைச் சந்தித்தார்.
ஜெனரல் ஷ்னைடரை, ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப் படைத் தளத்தின் கட்டளை அதிகாரி, எயார் கொமடோர் புத்திக பியசிறி வரவேற்றார். மேலும், விமானப்படையின் வர்ண அணிவகுப்பு பிரிவின் சார்பில் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க பசிபிக் விமானப்படைகளின் தளபதி, தலைமைத் தளபதி, பிரதித் தலைமைத் தளபதி மற்றும் விமானப் படை மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர்களையும் சந்தித்தார். இரு தளபதிகளுக்கும் இடையிலான சுமுகமான கலந்துரையாடல்கள், கூட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் கவனம் செலுத்தப்பட்டன.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதோடு, இந்த உத்தியோகப்பூர்வப் பயணம் நிறைவடைந்தது.