கொழும்பு இலங்கை விமானப்படை நிலையத்தின் பல் மருத்துவமனை தனது 12வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது
கொழும்பு இலங்கை விமானப்படை பல் மருத்துவமனை தனது 12வது ஆண்டு விழாவை நேற்று (01 ஆகஸ்ட் 2026) கொண்டாடியது. வழக்கமான பணி அணிவகுப்புடன் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கின. இதனைப் படைத்தளபதி, எயார் கொமடோர் ஜே.பி.டபிள்யூ. ஜெயவிக்ரம ஆய்வு செய்தார்.
இதனை முன்னிட்டு, ஹன்வெல்லவில் உள்ள கன்ரோ ஹாலிடே ரிசார்ட்டில் பல் மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் சிவில் பணியாளர்களின் பங்கேற்புடன் ஒரு வெளிநிகழ்வு ஓன்று நடத்தப்பட்டது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் (டாக்டர்) லலித் ஜெயவீர இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களிடையே குழுப்பணி, மன உறுதி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு குழு உருவாக்கும் செயல்பாடுகள் இடம்பெற்றன.