பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ் தரங்கவிற்கு விமானப்படையினால் பதவி உயர்வு.
சமீபத்தில் நிறைவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல்   ரொமேஷ் தரங்க , ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாம்பியன்களைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன்  தங்கப் பதக்கத்தை வென்றார்.  தாய்நாட்டிற்குப்  பெருமையைக் கொண்டுவந்த அவரது இணையற்ற திறமையையும், அவரது முந்தைய சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி, எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களினால் கோப்ரல் பதவி நிலையில் இருந்து  சார்ஜென்ட் பதவி நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. 

மேலும், விமானப்படைத் தளபதியினால்  ரொமேஷ் தரங்கவிற்கு ஒரு சிறப்பு நிதியுதவியும்  வழங்கப்பட்டது.  இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்குப் பின்னால் இருந்த அவரது பயிற்சியாளர் டோனி பிரசன்னா மற்றும் உடற்பயிற்சி  உதவியாளர் கோப்ரல்   சந்திம குருசிங்க ஆகியோரின் சேவைகளைப் பாராட்டும் விதமாக, அவர்களுக்கும்  பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.   இந்த சிறப்பு மரியாதை மற்றும் பாராட்டு நிகழ்வு  (05 ஆகஸ்ட் 2026) விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை