19வது சேர் ஜான் கொத்தலாவலபாதுகாப்பு பல்கலைக்கழத்தின் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.
ஜெனரல் சேர்  ஜான் கொத்தலாவல  பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் (KDU) 19வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு (IRC) 20 ஆகஸ்ட் 2026 அன்று தொடங்கியது. இதன் தொடக்க அமர்வில் இலங்கை விமானப்படைத் தளபதி, எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க கலந்துகொண்டார். “நெருக்கடியிலிருந்து வாய்ப்புக்கு: ஒரு மீள்திறன் மிக்க எதிர்காலத்திற்காக ஆளுகை, உள்கட்டமைப்பு மற்றும் புதுமைகளை மறுபரிசீலனை செய்தல்” என்ற கருப்பொருளின் கீழ், பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.  ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பள்ளியின் தகைசால் பேராசிரியர்/கௌரவ மருத்துவப் பேராசிரியர், பேராசிரியர் மாலிக் பீரிஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இந்த இரண்டு நாள் மாநாடு, அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் சமகால தேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து அறிவைப் பரிமாறிக்கொள்ளவும், ஆராய்ச்சிகளை முன்வைக்கவும், ஒத்துழைப்பை வளர்க்கவும் ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது. இது பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகள், பொறியியல், மேலாண்மை, சமூக அறிவியல் மற்றும் மானுடவியல், சட்டம், கணினியியல், குற்றவியல் நீதி, மருத்துவம், துணை அறிவியல்கள் மற்றும் பாலின சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது. தொடக்க அமர்வில் ஜான் கொத்தலாவலபாதுகாப்பு பல்கலைக்கழத்தின்   வேந்தர் மற்றும் துணை வேந்தர், மூத்த கல்வி மற்றும் நிர்வாகப் பணியாளர்கள், பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், தூதரகப் பிரதிநிதிகள், முப்படைகளின் தளபதிகள், மூத்த இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை