“அட்லஸ் ஏஞ்சல் II – 2026” கூட்டு விமானப் பயிற்சி ஆரம்பம்
இலங்கை விமானப்படை, ஐக்கிய அமெரிக்கத் தூதரகம், மொன்டானா தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பசிபிக் விமானப்படைகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “அட்லஸ் ஏஞ்சல் II – 2026” கூட்டு விமானப் பயிற்சி, கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் (31 ஆகஸ்ட் 2026) தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி, கண்டி, திகன, கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பகுதிகளை மையமாகக் கொண்டு, எதிர்வரும் 04 செப்டம்பர் 2026 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியின் முதலாம் நாள் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பகுதிகளை மையமாகக் கொண்டு இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் இலங்கை விமானப்படையின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வா, இலங்கை விமானப்படை பணிப்பாளர் குழுவின் அதிகாரிகள், கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி, எயார் வைஸ் மார்ஷல் அமித ஜயமஹா (பயிற்சி ஒருங்கிணைப்பு அதிகாரி) மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் விமானப்படைப் பிரிவின் துணைத் தளபதி, பிரிகேடியர் ஜெனரல் டிரேஸ் தோமஸ் மற்றும் அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் அதிகாரிகள், பிற அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
Open Ceremony

knowledge Sharing Session @ CBRNE Wing
Official Visit to the Performing Arts Wing