இலங்கை விமானப்படையின் இல 01 விமானிகளின் பயிற்சிப் பிரிவு, தனது 75வது ஆண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடுகிறது.
இலங்கை விமானப்படையின் பெருமைமிக்க விமானப் பாரம்பரியத்தின் இதயத்துடிப்பான, 'விமானிகளின் இல்லம்' என்று  அழைக்கப்படும் இல 01 விமானிகளின் பயிற்சிப் பிரிவு, தனது 75வது ஆண்டு விழாவை   (01 செப்டம்பர் , 2026)  சீனக்குடா   விமானப்படை அகடமியில்   கொண்டாடியது.    ஏழரை தசாப்தங்களுக்கு மேலான நீண்ட வரலாற்றின்   இராணுவ விமானப் பயிற்சித் துறையில்  சிறப்பாக   ஆற்றப்பட்ட   இணையற்ற பணி  பெருமையுடன் நினைவுகூரப்பட்டது. 

ராயல் விமானப்படையின் பிளைட் லெப்டினன்ட் நார்மன் லஷ் அவர்களின் தலைமையில், 1951 செப்டம்பர் 01 அன்று கட்டுநாயக்கவில் தொடங்கப்பட்ட இந்தப் படைப்பிரிவு , பின்னர் இராணுவ விமானப் பயிற்சிக்கு மிகவும் பொருத்தமான சூழலை வழங்கும் சீனக்குடா வளாகத்தில் நிறுவப்பட்டது.  அடிப்படை விமானப் பயிற்சியுடன் தொடங்கிய இந்தப் பயணம், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப காலப்போக்கில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  இன்று, இது PT-6 மற்றும் செஸ்னா-150 ரக விமானங்களைக் கொண்டு, அடிப்படை மற்றும் இடைநிலை விமானப் பயிற்சி வழங்கும் ஒரு முதன்மை நிறுவனமாகச் செயல்படுகிறது.

75வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல சமூக சேவை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.  மேலும் அன்றய தினம் நடைபெற்ற பிரதான ஆண்டு விழா, அப்படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் இர்ஷாத் முத்தாலிஃப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   இந்நிகழ்விற்கு  சேவைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்,  மேலும் அவர்களுக்கு விமானங்கள் மற்றும் அது தொடர்பான நவீன தொழில்நுட்பம் குறித்த ஒரு சிறப்பு விளக்க நிகழ்வும் வழங்கப்பட்டது. 

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தாய்நாட்டிற்கு தொழில்முறைத் திறன், ஒழுக்கம் மற்றும் செயல்பாட்டுத் திறன் கொண்ட விமானிகளின் ஒரு தலைமுறையை வழங்கியுள்ள இல . 01 விமானிகளின் பயிற்சிப் பிரிவு, தனது பெருமைமிக்க பாரம்பரியத்தைத் தொடர்ந்து பாதுகாத்து வருவதுடன், இலங்கையின் விமானப் போக்குவரத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை