இலங்கை விமானப்படையின் சிவில் நிர்வாகப் பிரிவில் 160 புதிய பணியாளர்கள் இணைப்பு.
இலங்கை விமானப்படையின் சிவில் நிர்வாகப் பிரிவில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிதாக ஆட்சேர்ப்பில்  160 சிவில் ஊழியர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் சிறப்பு நிகழ்வு,  (02 செப்டம்பர் 2026) இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் மற்றும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், வெளிப்படையான மற்றும் நியாயமான தெரிவு நடைமுறையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் இலங்கை விமானப்படை கொண்டுள்ள பரந்த பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் சிவில் பணியாளர்கள் ஆற்றும் முக்கிய பங்களிப்பு இந்நிகழ்வின்போது வலியுறுத்தப்பட்டது.

விமானப்படையின் செயல்பாட்டு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் திறமையான செயல்பாட்டை உறுதி செய்வதில் சிவில் ஊழியர்கள் முக்கிய பங்கு வகிப்பதும், இதன் மூலம் இலங்கை விமானப்படையின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்கு அவர்கள் நேரடியாகப் பங்களிப்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் நாடு  முழுவதும் உள்ள பல்வேறு இலங்கை விமானப்படை நிலையங்கள் மற்றும் தளங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதுடன், அங்கு அவர்கள் நிர்வாகம் மற்றும் பிற அத்தியாவசிய ஆதரவு சேவைகளுக்குப் பங்களிப்பார்கள்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், இலங்கை விமானப்படையின் சிவில் நிர்வாகப் பணிப்பாளர் சட்டத்தரணி எச். எச். என். பிரியங்கனி ஹேவரத்ன, இலங்கை விமானப்படை முகாமைத்துவ சபையின் உறுப்பினர்கள் மற்றும் விமானப்படைத் தலைமையகத்தின் ஏனைய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த 160 புதிய சிவில் ஊழியர்களின் நியமனமானது, இலங்கை விமானப்படையின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அரச சேவையில் ஒரு புதிய அத்தியாயத்தையும் திறந்து வைக்கிறது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை